பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136, பெரிய புராண விளக்கம்-4

பிறகு உள்ள 54-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

திண்ணனார் தம்முடைய தந்தையாகிய நாகனு டைய முதிய நிலையைத் தம்முடைய திருவுள்ளத்தில் எண்ணி, தளர்ச்சியை மேற்கொண்டு தங்களுடைய வேட்டுவச் சாதியினுடைய தலைமைப் பதவிக்குச் சார்தல் தோன்றவே, வந்தமைந்த குறைபாட்டை நிரப்பும் வண்ணம் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்ட குறித்த எண்ணத் கோடு நாகன் கூறியதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, முதலில் அந்த நாகனுடைய வெற்றிக்கழலைப் பூண்ட திருவடிகளைப் பணிந்து விட்டு, முறைமையினால் அவன் கொடுத்த முதன்மையான உடைவாளையும் தோலாடையை யும் தம்முடைய கைகளில் வாங்கிக்கொண்டு, தம்முடைய திருவுள்ளத்தில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு நின்றுகொண்டிருந்த தி ண் ண ன ரு க் கு செல்வத்தைப்பெற்ற தந்தையாகிய நாகன் لالا سا (y6)}(IBatہیے۔ தன்னுடைய வதனம் மலர்ச்சியை அடைந்து பின்வருமாறு கூறுகிறவனானான். பாடல் வருமாறு :

தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு

தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற வந்தகுறை பாடதனை கிரப்பு மாறு

மனம்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தைஅவன் கழல்வணங்கி முறைமை தந்த

முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு சிந்தைபரம் கொளகின்ற திண்ண னார்க்குத்

திருத்தாதை முகம்மலர்ந்து செப்பு கின்றான்." தந்தை-திண்ணனார் தம்முடைய தந்தையா கிய நாகனுடைய. நிலை-முதிய நிலையை. உட்கொண்டுதம்முடைய திருவுள்ளத்தில் எண்ணி. தளர்வு-தளர்ச்சியை.

கொண்டு-மேற்கொண்டு. தங்கள்-தங்களுடைய. குலவேட்டுவச் சாதியினுடைய த் சந்தி. தலைமைக்கு

தலைமைப் பதவிக்கு. சார்வு-சார்தல். தோன்ற தோன்றவே. வந்த-வந்து அமைந்த. குறைபாடதனை-குறைபாட்டை.