பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置况& - பெரிய புராண விளக்கம்-4

கூறித் தன்னுடைய இயல்போடு நின்று கொண்டிருந்த நாகன் திண்ணனாருக்கு விடைகொடுத்து அனுப்பினான். பாடல் வருமாறு :

நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை

கான்கொண்டு பரித்ததன்மேல் நலமே செய்து தெம்முனையில் அயற்புலங்கள் கவர்ந்து கொண்ட

திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் ; வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் .

விரைந்துநீ தாழாதே வேட்டை ஆட இம்முரண்வெம் சிலைவேடர் தங்க ளோடும்

எழுக என விடைகொடுத்தான் இயல்பில்

கின்றான் ."

நம்முடைய குல-நம்முடைய சாதியிற் பிறந்த, மறவர்வேடர்களினுடைய. சுற்றத்தாரை - உறவினர்களை; ஒருமை பன்மை மயக்கம். நான்-யான். கொண்டு-துணை வர்களாகக் கொண்டு. பரித்து - இந்தத் தலைமைப் பதவியைத் தாங்கி. அதன்மேல்-அதற்குப் பின்னால். நலமேநன்மைகளையே ஒருமை பன்மை மயக்கம். செய்துபுரிந்து. தெம்முனையில் - பகைவர்கள் டோர் புரியும் போர்க்களத்தில். அயற்புலங்கள்-வேறு இடங்களில் வாழ் பவர்களிடம் ; இட ஆகுபெயர். கவர்ந்து கொண்டஉள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்த வற்றிற்கு. திண்-கருவியாக இருந்த உறுதியான. சிலையின்வில்லினுடைய வளம்-வளப்பம். ஒழியா-நீங்காத. ச்: சந்தி. சிறப்பின்-சிறப்போடு. வாழ்வாய்-நீ வாழ்வாயாக. வெம்கொடுமையான. முனையின்-காடுகளாகிய இடங்களில்; ஒருமை பன்மை மயக்கம், வேட்டைகளும்-விலங்குகளை வேட்டையாடும் தொழில்களும். உனக்கு நினக்கு. வாய்க்கும்-வாய்ப்பாக அமையும். விரைந்து-வேகத்தோடு. நீ தாழாது-தாமதம் செய்யாமல். ஏ. அசைநிலை. வேட்டை ஆட விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக. இம்முரண்இந்த வலிமையைக் கொண்ட வெம்-கொடியதாக இருக்