பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் J29,

கும். சிலை-விற்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். வேடர் தங்களோடும்-வேடர்களோடும். தம் : அசைநிலை. எழுக - எழுவாயாக. என-என்று கூறி : இடைக்குறை. இயல்பில்-தனக்கு உரிய இயல்போடு உருபு மயக்கம். நின்றான்-நின்றுகொண்டிருந்த நாகன். விடைகொடுத் தான்-திண்ணனாருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

பிறகு வரும் 56-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சிவந்த கண்களையும் வலிமையையும் கொலை புரியும் ஆற்றலையும் பெற்ற ஆண்சிங்கத்தைப் போன்ற உறுதியைக் கொண்ட திண்ணனார் தான் முற்பிறவியில் புரிந்த தவத்தின் பயனாகப் பெருமையைப் பெற்ற கொடுமையான கண்களையும் பேராற்றலையும் பெற்று. விளங்கும் தம்முடைய தந்தையாகிய நாகனுடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைப் பணிந்து விட்டு அவனுடைய முன்னால் நின்று கொண்டு அவனிடம் விடையைப் பெற்றுக் கொண்டு தம்முடைய திருமாளிகைக்கு வெளியில் எழுந் தருளி வேடர்களோடும் மங்கலமான நீர் நிரம்பிய சுனையில் முழுகிவிட்டு வந்து தம்முடைய திருமாளிகையில் தங்கியிருந்து, தங்கிய இரவு நேரம் விடியும் வேளையில் வரிந்து கட்டிய விற்களைச் சேமித்து வைத்திருக்கும் ஆயுத சாலைக்குள் வீரம் பொங்கி எழும் வில்லால் ஆற்றலைக் காட்டும் விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஏற்ற திருக்கோலத்தை மேற்கொள்வதற்காக அ ல ங் காரம் செய்யும் தொழிலில் வல்லவராகிய கலைஞரோடும் தோற்றப் பொலிவை அடைந்து நுழைந்தார். பாடல் வருமாறு :

செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்

திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற வெங்கண் விறல் தாதைகழல் வணங்கி கின்று

விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும் 3 سیس- هی )