பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 131

செய்யும். தொழில்-வேலையில் வல்லவராகிய, கை-கைகளின் திறமையைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். வினைஞ ரொடும்-கலைஞரோடும். பொலிந்து-தோற்றப் பொலிவை அடைந்து. புக்கார்-நுழைந்தார்.

அடுத்து வரும் 57-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

நெளிகளைப் பெற்ற தம்முடைய தலைமயிரின் சுருள்கள் உச்சியில் முடிக்கப்பெற்று நிமிர்ந்து விளங்க அதன்மேல் தளிர்களோடு கட்டப் பெற்ற கொண்டை மாலைக்கு நடுவில் மிக்க பிரகாசத்தைப் பெற்ற மயிற் பீலிகளைச் சேர்த்துக் கட்டி நறுமணத்தைப் பெற்ற முல்லை மலர் மாலையின் மேல் குறிஞ்சி மலரும், வெட்சி மலரும் நெருங்குதலைப் பெற்ற வண்டுகளினுடைய கூட்டம் சீர்த்தியைப் பெற்று மொய்க்கும் வண்ணம் முதுகுப்புறத்தில் அமைத்து. பாடல் வருமாறு : -

நெறிகொண்ட குஞ்சிச் சுருள்

துஞ்சி கிமிர்ந்து பொங்க முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி

சேர்த்தி வெறிகொண்ட முல்லைப் பிணைtது குறிஞ்சி வெட்சி செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு

- செய்து .' இந்தப் பாடல் குளகம். நெறி-நெளிகளை ஒருமை பன்மை மயக்கம். கொண்ட-பெற்ற. குஞ்சி-தம்முடைய தலைமயிரில் உள்ள ச்: சந்தி. சுருள்-சுருள்கள் ; ஒருமை பன்மை மயக்கம். துஞ்சி-உச்சியில் முடிக்கப் பெற்று, நிமிர்ந்து-மேல்நோக்கி, பொங்க-பொங்கி எழ. முறி-அதன் மேல் தளிர்களோடு: ஒருமை பன்மை மயக்கம். தளிர்: முற்றாத இலை. கொண்ட-கட்டப் பெற்ற, கண்ணிக்குகொண்டை மாலைக்கு. இடை-நடுவில். மொய்-மிகுதியாக இருக்கும். ஒளி-பிரகாசத்தைப்பெற்ற பீலி-மயிற் பீலிகளை; ஒருமை பன்மை மயக்கம். சேர்த்தி-சேர்த்துக் கட்டி. வெறி