பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 137

வில்லை. வலம் - தன்னுடைய வலக்கையில். கொண்டுஎடுத்துக் கொண்டு. பணிந்து-தன்னுடைய குலதெய்வத்தை வணங்கிவிட்டு. திண்ணன் சார-திண்ணன் சேரும்படி, த்: சந்தி. திரு-தன்னுடைய அழகிய த்: சந்தி. தாள்-திருவடியை. மடித்து - வளைத்து வைத்துக் கொண்டு. ஏற்றி-அந்த வில்லில் நாண் கயிற்றைக் கட்டி. வியந்து-வியப்பை அடைந்து. தாங்கி-அந்த வில்லை. எடுத்துக் கொண்டு.

பிறகு வரும் 63-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அந்த இடத்தில் அந்தச் சமயத்தில் உலகங்களில் வாழ்பவர்களுடைய பிறவித் துன்பத்தைப் போக்கும் பொருட்டு ஓங்கி எழுந்த தூய்மையும் பெருமையும் பெற்ற பெரிய மாரியைப்போல துண் என்று சத்தமிட கொடுமையான தம்முடைய கண்களில் கோபம் நெடுநேரம் விலகி விலகி அகலத் தம்முடைய சிவந்த கைகளாகிய இடங்களால் வில்லைத் தடவிச் சிறிய நாண் கயிற்றைத் திண்ணனார் சுண்டினார். பாடல் வருமாறு :

அங்கப் பொழுதிற் புவனத்திடர் வாங்க ஓங்கித் துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப வெங்கட்சினம் நீடுவிலங்கி விலங்கி நீங்கச் - செங்கைத்தலத் தால்தட விச்சிறு காண் எறிந்தார் .

அங்கு-அந்த இடத்தில். அப்பொழுதில் அந்தச் சமயத்தில். புவனத்து-உலகத்தில் வாழும் மக்களுடைய, இடஆகு பெயர். இடர்-பிறவித் துன்பத்தை. வாங்கபோக்கும் பொருட்டு. ஓங்கி-ஓங்கி எழுந்து. த், சந்தி. துங்கதுய்மையான. ப்: சந்தி. பெரு-பெருமையைப் பெற்ற. மாபெரிய. மழை-மாரியை. போன்று-போல. துண் என்று ஒலிப்ப- துண் எனச் சத்தத்தை எழுப்ப, வெம்-கொடு மையான கண்-தம்முடைய கண்களில்; ஒருமை பன்மை மயக்கம். சினம்-கோபம். நீடு - நெடுநேரம், விலங்கிவிலகி. விலங்கி-விலகி. நீங்க-அகல. ச்: சந்தி. செம்தம்முடைய சிவந்த கைத்தலத்தால் - கைகளாகிய இடங்