பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 145

திருவடி முன்-முன்னால், சென்று-போய். நீளுமாறு-நீளும் இய்ல்பை. போல்வ.போல உள்ளவை. செய்ய-சிவந்த, நாவின்-நாக்கு களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வாயவாய்-வாய்களைப் பெற்றவையாகி. ஒன்றொடு ஒன்று-ஒரு நாயோடு வேறு ஒரு நாய். நேர்படாமல்-ஒன்று சேராமல். ஒடு-ஒடுகின்ற. நாய்கள்-வேட்டை நாய்கள். மாடு-அந்தக் காட்டின் பக்கம். எலாம் எல்லாம் காணப் பட்டன; இடைக்குறை.

பிறகு வரும் 70-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

போர்த்தொழிலையும், வலையை வீசி விலங்குகளைப் பிடிப்பதையும், வில்லைப் பிரயோகம் செய்யும் தொழிலையும் வெளியில் செய்பவரும், தம்மைச் சார்ந்த வலையைப் போன்ற பந்த பாசமாகிய கட்டினை அறுக்கும் வண்ணம் போகும் ஐயராகிய திண்ணனாருக்கு முன்னால் கரிய வலையில் அகப்படுத்தும் பொருட்டு மலைப்பக்கத்திலும் காட்டிலும் வாழும் விலங்குகளை வளைத்துப் பிடிப் பதற்காக நீண்ட வார்களையும், வலை வகைகளையும் தூக்கிக்கொண்டு வந்த மலை வாணர்களாகிய வேடர்கள் முந்திக்கொண்டு சென்றார்கள். பாடல் வருமாறு:

போர் வலைச் சிலைத்தொழிற் புறத்திலே

விளைப்பவர் சார் வலைத் தொடக்கறுக்க ஏகும் ஐயர் தம்முனே கார் வலைப் படுத்தகுன்று கானமா வளைக்க நீள் வார் வலைத் திறம்சுமந்து வந்தவெற்பர்

. - . . . - - - முந்தினார்.

போர்-போர்த் தொழிலையும். வலை வலையை வீசி விலங்குகளைப் பிடிப்பதையும், ச் சந்தி. சிலை-வில்லைப் பிரயோகம் செய்யும். த், சந்தி. தொழில்-தொழிலையும். புறத்தில்-தாம் வாழும் உடுப்பூருக்கு வெளியில். ஏ: அசை நிலை. விளைப்பவர்-செய்பவரும். சார்-தம்மைச் சார்ந்து. வலைத்தொடக்கு-வலையைப் போன்ற பந்த பாசமாகிய

- 10 - 4 سده نQL