பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 . பெரிய புராண விளக்கம்-4

கோடு முன் பொலிக்கவும் குறுங்கண்ஆ குளிக்குலம் மாடு சென் றிசைப்பவும் மருங்கு பம்பை r கொட்டவும் சேடு கொண்ட கைவிளிச் சிறந்தஓசை செல்லவும் காடு கொண்டெழுந்த வேடு கைவளைந்து

சென்றதே."

கோடு. ஊதுகொம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். முன்பு-தங்களுக்கு முன்னால். ஒவிக்கவும்-முழங்கவும். குறும்சிறியவையாக இருக்கும். கண் அடிக்கும் பக்கங் களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ஆகுளி-சிறு பறைகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி. குலம்-தொகுதி. மாடு-பக்கத்தில். சென்று-போய். இசைப் பவும்-ஒலியை எழுப்பவும், மருங்கு-மற்றொரு பக்கத்தில். பம்பை-பம்பையை கொட்டவும் . அதை வைத்திருப்பவர் தட்டி ஒலிக்கச் செய்யவும். சேடுகொண்ட-திரட்சியைக் கொண்ட, பெருமையைக் கொண்ட எனலும் ஆம், கைதங்களுடைய கைகளை ஒருமை பன்மை மயக்கம். விளி. ஒருவரை அழைக்கும்போது கைகளைத் தட்டி அழைப்பது வழக்கம். ச்: சந்தி. சிறந்த ஒசை-சிறப்பாக அமைந்த சத்தம். செல்லவும்-எங்கும் பரந்துபோகவும். காடு - காட்டில். கொண்டு-வேட்டையாடுதலை மேற்கொண்டு. எழுந்தஎழுந்து சென்ற வேடு-வேட்டுவச்சாதி; "வேடு கொடுத்தது பார்' என்று கம்பராமாயணத்தில் வருவதைக் காண்க. கை-பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வளைந்துவளைந்து வளைந்து. சென்றது - போயிற்று. ஏ: ஈற்றசை நிலை.

அடுத்து வரும் 73-ஆம் பாடலின் கருத்து வருமாறு: நெருங்கி வளர்ந்த பசுமையான மரங்களினுடைய சாதிகள் உயர்ந்து வளர்ந்திருக்கும் காட்டை அடைவதற் காக நேரி ல் வ ரு ம் கருமையான விற்களை ஏந்திய விசாலமான கைகளைப் பெற்றவர்களும், பெருமையை உன்டயவர்களும் ஆகிய வேடர்களினுடைய படை, கரையை