பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 五53°

வெம்-கொடுமையான. சிலை-வில்லை ஏந்திய, க்: சந்தி. கை-இடக்கையைப் பெற்ற. வீரனாரும்-வீரராகிய திண்ண னாரும். வேடரோடு-வேடர்களோடு; ஒருமை பன்மை மயக்கம். கூடி-சேர்ந்து கொண்டு. முன்-முன்னால். மஞ்சுமேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அலைக்கும். தவழும். மா-பெரிய மலை-மலையினுடைய. சரி-சரிவுக்கு. ப்: சந்தி, புறத்து-வெளியில். வந்த-ஒடி வந்த. மா-மான் முதலிய விலங்குகளை ஒருமை பன்மை மயக்கம். அஞ்சு வித்து-அச்சத்தை அடையுமாறு செய்து. அடர்க்கும்எதிர்க்கும். நாய்கள்-வேட்டை நாய்களை. அட்டமாகநேராக. விட்டு-ஒடுமாறு விட்டு. நீள்-நீளமானவையும்; வினையாலணையும் பெயர். செஞ்-சிவந்தவையும்; வினை யாலணையும் பெயர். சரத்தினோடு-ஆகிய அம்புகளோடு: ஒருமை பன்மை ம்யக்கம். சூழல்-பாதுகாவலை செய்தஅமைத்துள்ள. கானுள்-காட்டுக்குள். எய்தினார்-போய்ச்' சேர்ந்தார். திண்ணனாரை வீரர் என்று கூறுவதை, 'கண் துயிலாத வீரர். (கண்ணப்ப நாயனார் புராணம், 132): என்று வேறோரிடத்தில் சேக்கிழார் பாடுவதாலும் go-gossroofrt D. -

அடுத்து உள்ள 77-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'கொடிய மான் முதலிய விலங்குகளை எழும்பி ஒடுமாறு: செய்யும் வண்ணம் அந்த வேட்டை நாய்களை ஏவி விட்டு மலை வாணர்களாகிய வேடர்களினுடைய கூட்டம் ஒடிச் சென்று நேராக எய்வதற்கு உரியவை ஆகும் அம்புகளை முன்னால் ஆராய்ந்து எடுத்துக் கொண்டுபோக எந்த இடங்களிலும் மிகுதியாக ஓசையை எழுப்பும் உடுக்குக்களின் தொகுதிகள், பம்பை முதலிய வாத்தியங்கள் முழங்கி எழத் தங்களுடைய கைகளைத் தட்டி அதிரச் செய்து விலங்கு களைக் காடு முழுவதும் எழுந்து ஓடுமாறு செய்தார்கள்." பாடல் வருமாறு: