பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - பெரிய புராண விளக்கம்-4

வெய்யமா எழுப்பஏவி வெற்பர் ஆயம் ஒடிகேர் எய்யும்வாளி முன்தெரிந்து கொண்டுசெல்ல

எங்கணும் மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்

தெழக் கைவிளித் ததிர்த்துமா எழுப்பினார்கள்

கானெலாம் .'

வெய்ய-கொடிய. மாமான் முதலிய விலங்குகளை: ஒருமை பன்மை மயக்கம். எழுப்ப-எழும்பி ஓடுமாறு செய்யும் வண்ணம். ஏவி-வேட்டை நாய்களை ஏவி விட்டு. வெற்பர்-மலைவாணர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஆயம்-கூட்டம். ஒடி-ஒடிச் சென்று. நேர்-நேராக. எய்யும்எய்வதற்கு உரியவையாக இருக்கும். வாளி-அம்புகளை, ஒருமை பன்மை மயக்கம். முன் - மு ன் ன ல். தெரிந்து - ஆராய்ந்து. கொண்டு - அந்த அம்பு களை எடுத்துக் கொண்டு. செல்ல-போக. எங்கணும்எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். கனும்: இடைக்குறை. மொய் - மிகுதியாக. குரல்-ஒசையை எழுப்பும். துடி-உடுக்குக்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. குலங்கள்-தொகுதிகள். பம்பை முன்பம்பை முதலிய வாத்தியங்கள்; என்றது முரசு, பேரிகை, பறை, தப்பட்டை முதலியவற்றை. சிலைத்து - முழங்கி. எழ-எழா நிற்க. க்: சந்தி. கை-தங்களுடைய கைகளை; ஒருமை பன்மை மயக்கம். விளித்து-தட்டி, அதிர்த்துஅதிரச் செய்து. மா-மான், கரடி, வேங்கை, புலி, சிங்கம், ஒநாய், நரி முதலிய விலங்குகள்ை: ஒருமை பன்மை மயக்கம். கான்-காடு. எலாம்-முழுவதும்; இடைக்குறை. எழுப்பினார்கள்-எழுத்து ஒடுமாறு செய்தார்கள். -

அடுத்து உள்ள 78-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: - 'காட்டுப்பன்றியோடு மான்களினுடைய கூட்டங்கள் கரடி, உறுதியான கலைமான்களினுடைய கூட்டம், காட்