பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I56 பெரிய புராண விளக்கம்-4

புக்கள் துண்டிக்கப்பட்டவையாகவும், தலைகள் வெட்டம் பட்டவையாகவும் ஆயின. சில காட்டுப்பக மாடுகள் அம்புகளால் தங்களுடைய குடல்கள் அறுந்து தரையில் விழ இறந்து போயின; நெருங்கியிருந்த கடமை மான்கள் நீண்ட தங்களுடைய உடம்புகளின்மேல் வேடர்கள் எய்த அம்பு உருவிச் செல்லத் தங்களுடைய தலைகளை நிமிர்த்திக் கொண்டு கிடந்தன; பல புள்ளிமான்கள் ஆற்றலைக் கொண்ட அம்பு படும் தங்களுடைய உடம்புகள் துள்ள விழுபவையாக இருந்தன. பாடல் வருமாறு:

தாள்.அறுவன, இடைதுணிவன, தலைதுமிலன - கலைமா;

வாளிகளொடு குடல் சொரிதர மறிவனசில

மரைமா;. நீளுடல்விடு சரம்உருவிட கிமிர்வனமிடை கடமா, மீளிகொள்கணை படும்உடலெழ விழுவனபல

உழையே."

கலைமா-அவ்வாறு வேடர்கள் கொன்றபோது கலை மான்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாள்-தங்களுடைய கால்கள்; ஒருமை பன்மை மயக்கம். அறுவன-வெட்டம் பட்டவையாகவும். இடை-தங்களுடைய இடுப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம். துணிவன-துண்டிக்கப்பட்டவை யாகவும். தலை-தங்களுடைய தலைகள்; ஒருமை பன்மை மயக்கம். துமிலன-வெட்டப்பட்டவையாகவும் ஆயின. சில மரைமா-சில காட்டுப்பசு மாடுகள்; ஒருமை பன்மை மயக்கம். வாளிகளொடு-அம்புகளால்; உருபு மயக்கம். குடல்-தங்களுடைய குடல்கள் ஒருமை பன்மை மயக்கம். சொரிதர-அறுந்து தரையில் விழ. மறிவன - இறந்து போனவை ஆயின. மிடை-நெருங்கியிருந்த. கடமாகடமை மான்கள்; ஒருமை பன்மை மயக்கம். நீள்நீளமான உடல்-தங்களுடைய உடம்புகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். விடு-வேடர்கள் எய்த. சரம்-அம்பு. உருவிட-உருவிச் செல்ல. நிமிர்வன-தங்களுடைய தலைகளை