பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் I57

நிமிர்த்திக்கொண்டு தரையில் கிடப்பவை ஆயின. பல உழை. பல புள்ளி மான்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஏ. ஈற்றசை நிலை. மீளிகொள்-யமனைப் போன்ற ஆற்றலைக் கொண்ட, கணை-அம்பு. படும் உடல்-தைக்கும் தங்களுடைய உடம்பு கள்: ஒருமை பன்மை மயக்கம். எழ-துள்ள. விழுவன. விழுபவையாக இருந்தன.

அடுத்து உள்ள 80-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

கொடுமையான அம்புபட்ட கழுத்துக் கிழிய வேகமாக அந்த அம்பு உருவிச் சென்ற ஆழமான வாயையுடைய யானை தன்னுடைய கண்களிலிருந்து சிவந்த நெருப்பை உமிழ, அந்த யானையிடம் வேடர்கள் எய்த அம்பு பதிய, முன்னால் உள்ள பெரிய கருமையான விலங்காகிய காட்டுப் பன்றி அந்த இடத்தில் எழுந்த தன்னுடைய தலையை அந்த அம்பு ஊடுருவிச் சென்ற சமயத்தில் பலத்தை உடைய தன்னுடைய பற்கள் அழுந்தும்படி அந்த அம்பைப் பொங்கி எழுந்த கோபத்தோடு கவ்வுபவற்றைப் போலச் சில புலிகள் விளங்கின. பாடல் வருமாறு:

! வெங்கனைபடு பிடர்கிழிபட விசை உருவிய கயவாய்

செங்கனல் விட அதனொடு கணை செறியமுன்

இரு கருமா அங்கெழுசிரம் உருவியபொழு தடலெயிறுற

- அதனைப் பொங்கியசின மொடுகவர்வன புரைவனசில -

புலிகள்.'

வெம்-கொடுமையான. கணை-அம்பு படு-பதிந்த,

பிடர்-தன்னுடைய கழுத்து. கிழிபட-கிழிய. விசைவேகமாக. உருவிய - அந்த அம்பு ஊடுருவிச் சென்ற. கயவாய்-ஆழமான வாயை உடைய யானை அன்மொழித் தொகை. செங்கனல்-தன்னுடைய கண்களிலிருந்து சிவந்த நெருப்பை. விட-உமிழ. அதனொடு-அந்த யானையினிடம்: உருபு மயக்கம். கணை-வேடர்கள் எய்த அம்பு. செறிய