பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - பெரிய புராண விளக்கம்-4

என்னும் இரண்டு வகைகளாகிய. வினை: ஒருமை பன்மை மயக்கம். வலையிடை-வலையினிடையில் சிக்கி. நிலை. தங்களுடைய இயல்பான நிலைகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். சுழல்பவர்-சுழலும் மக்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நெறி-வாழ்க்கையின் வழியில், சேர்-சேர்கின்ற. புலன் - தன் மாத்திரைகளை ஒருமை பன்மை மயக்கம். இவை சப்த ஸ்பரிச ரூபரணகந்தம் என்பன ஒலி, தொடுதல், உருவம், சுவை, மணம் என்பவை. உறு-பெற்ற. மனனிடை-மனங்களின் நடுவில்; ஒருமை பன்மை மயக்கம். தடை செய்த-மெய்யறிவை அடைய முடியாதபடி தடையைப் புரிந்த பொறிகளின் மெய்; வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்து இந்திரியங் க்ளினுடைய அளவு-தன்மையை. உள-பெற்றிருந்தன; இடைக்குறை. ஏ: ஈற்றசை நிலை.

அடுத்து வரும் 86-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

கொடுமையைப் பெற்றவையாகிய விலங்குகளுக்கு எதிரில் வேகமாகச் சென்றும் அவற்றை மிக்க கொலையைச் செய்பவர்களாகிய விற்களை ஏந்திய வேடர்கள் உடுக்குக் களைப் போன்ற கால்களை உடையவையும், வளைந்த காதுகளைப் பெற்றவையும் ஆகி வந்த யானைக்குட்டி களைக் கொல்லுவதற்காக அவற்றைத் தொடர்ந்து செல்ல மாட்டார்கள்: வெடியைப் போல முழங்கி ஒடும் சிறிய விலங்குகளினுடைய குட்டிகளின்மேல் அம்புகளை எய்து உண்டாக்கும் கொலையை அவர்கள் செய்ய மாட் டார்கள்; தங்களுடைய கால்கள் தளர்ச்சியை அடையுமாறு கருப்பத்தை உடையவையாகி அடைகிற பெண் மான்களை அம்புகளை எய்து அவர்கள் அலைக்க மாட்டார்கள்." பாடல் வருமாறு: t -

துடியடியன, மடி.செவியன துறுகயமுனி

- - தொடரார் ; வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை

- - விரவார் .