பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - பெரிய புராண விளக்கம்-4

அடிகளின் சுவடுகளினுடைய ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். வழி-வழியில். செலும்-போகும்; இடைக் குறை. அளவில்-சமயத்தில். தாம்: அசைநிலை. ஒருவரும்ஒரு வேடரும். அறிகிலர்-அவர் போவதைத் தெரிந்து கொள்ளவில்லை. அவர்-அந்தத் திண்ணனார். தனிதனியாக தொடர்வுழி-அந்தக் காட்டுப் பன்றியைத் தொடர்ந்து செல்லும்போது. அதன்மேல்-அந்த விலங்கின் மேல். ஏ - அம்பினுடைய. முனை- துனியால், அடுகொல்லுகின்ற. சிலை-விற்களை ஏந்திய, ஒருமை பன்மை மயக்கம். விடலைகள்-காளை மாடுகளைப் போன்ற வேடர்கள், உவம ஆகுபெயர். இருவர்கள்- இரண்டு. பேர்கள். அடி-திண்ணனாருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பிரியார்- பிரியாதவர்களாகி அவரோடு: சென்றார்கள்: முற்றெச்சம்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 89-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அவ்வாறு விரும்பிச் சென்ற வெற்றிக் கழலைப் பூண்ட கால்களைப் பெற்ற வீரர்களாகிய வேடர்கள் நாணன் என்பவனும் நீண்ட வரிந்து கட்டப்பெற்ற வில்லை ஏந்திய காடன் என்பவனும் என்னும் இரண்டு பேர்களும் மலைப் பக்கத்தைக் காக்கும் காவலர்களோடு வேகத்தோடு சேர்ந்து கொண்டவர்களாகி எய்கின்ற அம்புகளோடு கொலை புரியும் வேட்டை நாய்களிடமிருந்து தப்பி நீள்மாக இருக்கிற மலைச் சரிவில் செல்லுவதாகி ஒரு மரத்தினுடைய நிழலுக்கு வேகமாகச் செல்லும் அந்தக் காட்டுப்பன்றி.' பாடல் வருமாறு:

நாடியகழல் வயவர்கள் அவர் நாணனும் நெடுவரிவில் காடனும் எனும் இருவரும்மலை காவலரொடு கடிதில் கூடினர் விடு புகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி, நீடியசரி படர்வதுதரு நீழலின் விரை கேழல். '

இந்தப் பாடல் குளகம். நாடிய-அவ்வாறு விரும்பிச் சென்ற, கழல்-வெற்றிக் கழல்களைப் பூண்ட கால்களைப்