பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩?G பெரிய புராண விளக்கம்-4

சென்றார்-எழுந்தருளினார். காவதம் அரையில் அரைக்காத தாரத்தில்: அரைக்காதம்-ஐந்துமைல், செம்-சிவந்த கண். கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ஏறு-இடப வாகனத்தை. உடையார் - தம்மு டைய வாகனtாகப் பெற்றவராகிய காளஹஸ்தீசுவரர். வைகும்-எழுத்தருளித் தங்கியிருக்கும். திரு-அழகிய, மலை-காளத்தி மலை யினுடைய. ச்: சந்தி. சாரல்-பக்கங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களை உடைய. சோலை-பூம்பொழிலை. கண்டார். பார்த்தார்.

செங்கண் ஏறு: செங்கண் வெள்ளேறி.', 'செங்கண் வெள்விடையாய்.” என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், செங்கண் மால்விடையார்', 'செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "செங்கண் யால் விடையாய் தெளிதேனே." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், செங்கண் வெள் விடையின் பாகர்,”, “செங்கண் வெள்ளேற்றின் பாகன்., 'செங்கண் மால்விடையார்.'. 'செங்கண் மால்விடையார் திருக் காளத்தி.", "செங்கண் விடையார் திருயேணி.'. 'செங்கண் விடையார் திருமலர்க்கை.', 'செங்கண் விடையார் திருவானைக்கா.', செங்கண் விடையார் திருவண்ணா மலை.', செங்கண் மால்விடை அண்ணல் மேவு திருப்பருப்பதம்.'", "செங்கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர்.', 'செங்கண் ஏற்றவர் தில்லை.', "செங்கண் ஏற்றவர் திருமுதுகுன்றினை,, செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி.", "செங்கண் ஏற்றவரே பொருள்,”, “செங்கண் விடையார் திருப்பழனம்., 'செங்கண் விடையார் பதிபலவும் பணிந்து., 'செங்கண் விடை உலக த்தவரைத் திருப்பதிகம் பாடினார்.','செங்கண் விடைக் கொடியார்,, 'செங்கண் விடையார் தமைப் பணிந்து., 'செங்கண் மால்வி.ையார் பாதும் சேர்த் தனர்.', 'செங்கண் விடையார் திருக்கோயில்,, செங்கண் விடையார் திருமுன்றில்..' என்று சேக்கிழாரும் பாடி அருளியவற்றைக் காண்க,