பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I80 பெரிய புராண விளக்கம்-4

வைத்த. திரு-அழகிய. முகலியினை-பொன்முகலியாற்றை. சி: சந்தி. சார்ந்தார்-நாணனும் காடனும் திண்ணனாரும் அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 99-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு அடைந்து அந்தப் பொன்முகலியாற்றினு டைய கரையின் பக்கத்தில் ஒரு அழகிய மரத்தினுடைய நிழலில் தாங்கள் கொண்டு வந்திருந்த காட்டுப்பன்றி யினுடைய உடம்பை வைத்து விட்டு வளைந்த வில்லை ஏந்திய காடன் என்னும் வேடனை மரத்தில் நெருப்பைக் கடையும் கோலைச் செய்து, 'இந்த இடத்தில் நீ நெருப்பைப் பாதுகாத்துப் பார்த்துக் கொண்டிருப்பாயாக. நாங்கள் இந்தக் காளத்தி மலையின் மேல் ஏறிப் பார்த்து விட்டு மீண்டும் வந்து சேருவோம்’ என்று திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு நாணன் என்னும் வேடனும் தாமும் சென்றார்கள். பாடல் வருமாறு:

ஆங்கதன் கரையின் பாங்கோர் அணிகிழற் கேழல்

-- இட்டு வாங்குவிற் காடன் றன்னை மரக்கடை தீக்கோல்

பண்ணி ஈங்கு நெருப்புக் காண்பாய்: இம்மலை ஏறிக் கண்டு நாங்கள்வந் தணைவோம்’ என்று காணனும் தாமும்

- - போந்தார் .' ஆங்கு-அவ்வாறு அடைந்து. அதன்-அந்தப் பொன்முகவி யாற்றினுடைய. கரையின்-கரைக்கு. பாங்கு-பக்கத்தில். ஒர் அணி-ஒர் அழகிய நிழல்-மரத்தினுடைய நிழலில்.கேழல்தாங்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்த காட்டுப்பன்றி யினுடைய உடலை; ஆகுபெயர். இட்டு-வைத்து விட்டு. வாங்கு-வளைந்த, வில்-வில்லை ஏந்திய. காடன் தன்னை. காடன் என்னும் வேடனை. தன்: அசைநிலை. மரக்கடை மரத்தைக் கடையும். தீக்கோல்-நெருப்பை உண்டாக்கும் கோலை. புண்ணி செய்து சங்கு:இந்த இடத்தில், நீநெருப்பு.