பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 183

கதிரவன் உச்சி கண்ணக் கடவுள்மால் வரையின் உச்சி அதிர்தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட இது என்கொல்? நாணா என்றார்க், கிம்மலைப்

- பெருந்தேன் சூழ்ந்து மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கெழும் ஒலிகொல் ?” என்றான் .'

கதிரவன்-சூரியன். உச்சி-உச்சியை நண்ண-அடைந்து நண்பகல் வேளை வர. க்: சந்தி. கடவுள்-தெய்வத் தன்மை யையும். மால்-பெருமையையும் பெற்ற வரையின்காளத்தி மலையினுடைய. உச்சி-மேற்புறத்தில். அதிர்-அதிர்ச்சியை: முதல் நிலைத்தொழிற் பெயர். தரும்-உண்டாக்கும். ஒசை ஐந்தும்-ஐந்து தேவ துந்துபிகளின் முழக்கமும். ஆர்கலிசமுத்திரத்தினுடைய. முழக்கம் - முழக்கத்தை. காட்டதோன்றச் செய்ய. இது-இந்த முழக்கம். என்.என்ன. கொல்: அசைநிலை. நானா-நாணனே. என்றார்க்கு-என்று கேட்ட திண்ணனாரிடம்: உருபு மயக்கம். இம்மலை-இந்தக் காளத்தி மலையில். பெருந்தேன்.பெரிய தேனடைகளை: ஆகுபெயர். சூழ்ந்து-சுற்றிக்கொண்டு. மது-தேன் நிறைந்த, மலர்-மலர்களை ஒருமை பன்மை மயக்கம். ஈக்கள். தேனீக்கள். மொய்த்து-மொய்த்து அதனால். மருங்குபக்கத்தில். எழும்-எழுந்து கேட்கும். ஒலிகொல்-ஓசையோ. என்றான்.என்று திண்ணன் கேட்டான். - -

அடுத்து வரும் 102-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

முன் பிறவியில் புரிந்த தவப்பயனினுடைய தொகுதி முடிவே இல்லாத இன்பமான பக்தியை எடுத்துக் காண்பிக்க அளவு இல்லாத பேராவல் பொங்கி எழுந்து நிலைபெற்று விள்ங்கும் விருப்பம் மிகுதியாக உண்டாக வள்ளலாராகிய திண்ணனார் அந்தக் காளத்தி மலையைப் பார்த்துத் தம்முடைய எலும்புகள் நெகிழ்ந்து உருக்கத்தை அடைந்து தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த பெரிய விருப்பத் தோடும், பாடல் வருமாறு: