பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 1852

நம்பியாண்டார் நம்பியும், 'என்பு கரைந்து., 'என்புள் ளுருக்கும் அடியாரை.', 'என்பும் மனமும் கரைந்துருக விழுந்தார்.', 'என்பும் உருக உயிரொன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.', 'என்புருக மடுத்தெரித் தார்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக். காண்க.

பிறகு வரும் 108-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நாணன் என்னும் வேடனும் தம்முடைய பக்தியும் முன்னால் குளிர்ச்சியைப் பெற்ற காளத்தி மலையின் மேல் ஏறிச் செல்ல, தாமும் பாதுகாக்கும் தத்துவங்கள் என்று கூறப்படும் பெருகிய படிகளின் மேல் ஏறி ஆணையாகும். சிவத்தைச் சேர்வதற்காக அடைபவர்போல ஐயர் ஆகிய திண்ணனார் உயரமான நிலையைக் கொண்டே அந்தக் காளத்தி மலையின்மேல் ஏறி நேராக எழுந்தருளும். சமயத்தில். பாடல் வருமாறு: -

காணனும் அன்பும் முன்பு களிர்வரை ஏறத் தாமும், பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம் ஏறி. ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்..'

இந்தப் பாடலும் குளகம். நாணனும்-நாணன் என்னும் வேடனும். அன்பும்-தம்முடைய பக்தியும். முன்பு-முன்னால். நளிர்-குளிரும். வரை-கர்ளத்தி மலையின் மேல். ஏற-ஏறிச் செல்ல. த்: சந்தி. தாமும்-திண்ணனாராகிய தாமும், பேணு. பாதுகாக்கும். தத்துவங்கள் என்னும்-தத்துவங்கள் என்று: கூறப்படும். இவை 96 ஆகும். பெருகு-பெருகியுள்ள. சோ பானம்-படிகளின் வழியாக; ஒருமை பன்மை மயக்கம். ஏறி-- மேலே ஏறிச் சென்று. ஆணையாம்-ஆணையாக விளங்கும். சிவத்தை-சிவபரம்பொருளை. ச்: சந்தி. சார-சேர்வதற்காக. அணைபவர்போல-அடைபவரைப் போல. ஐயர்-ஐயராகிய திண்ணனார். நீள்-உயரமாகிய நிலை-நிலையைப் பெற்ற. மலையைப்காளத்தி மலையின் மேல்; உருபு மயக்கம். ஏறி.