பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 195

வேண்டும்-வரவும் வேண்டும். என்று-என்று திண்ணனார் எண்ணி. - .

பின்பு உள்ள 112-ஆம் கவியின் கருத்து வருமாறு:

'திண்ணனார் அவ்வாறு மாமிசத்தைக் கொண்டு வருவதற்காகச் செல்வார்; திரும்பி வருவார்; காளஹஸ்தி சுவரரைத் தழுவிக் கொள்வார்; மறுபடியும் செல்வார்; விருப்பத்தோடும் அந்த ஈசுவரரைப் பார்த்துக் கொண்டே நிற்பார்; தன்னுடைய கன்றுக்குட்டியை விட்டு நீங்கும் ஈன்றணிமையை உடைய பசுமாட்டைப்போல விளங்குவார்; தலைவனே, தேவரீர் திருவமுது செய்வதற்காக நல்ல மென்மையாகிய மாமிசத்தை யானே குற்றம் ஒரு சிறிதும் இல்லாமல் ஆராய்ந்து பார்த்து வேறாக எடுத்துக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து சேருவேன்.' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்வார். பாடல் வருமாறு

போதுவர்; மீண்டு செல்வர்: புல்லுவர்; மீளப்

. . போவார்; காதலின் நோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப்

- போல்வர்; சநாதனே, அமுது செய்ய நல்லமெல் இறைச்சி கானே கோதறத் தெரிந்து கொண்டிங்கு வருவேன்?

- என்பார்."

போதுவர்-திண்ணனார் அவ்வாறு மாமிசத்தைக் கொண்டு வருவதற்காகச் செல்வார். மீண்டு-திரும்பி. செல்வர்-காளத்தி மலைக்கு வருவார். புல்லுவர்-காளஹஸ் தீசுவரரைத் தழுவிக் கொள்வார். மீள-மறுபடியும். ப்: சந்தி. போவார்-செல்வார். காதலின்- விருப்பத்தோடு, நோக்கி-அந்த ஈசுவரரைப் பார்த்துக் கொண்டே நிற்பர். நிற்பார். கன்று-தன்னுடைய கன்றுக் குட்டியை. அகல்விட்டு நீங்கும். புனிற்றா-ஈன்ற அணிமையை உடைய. ஆ. பசுமாட்டை. ப்: சந்தி. போல்வர்-போல விளங்குவார். தாதனே-அடியேனுடைய தலைவனே. அமுது செய்ய.