பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 197

திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. கண்தம்முடைய கண்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். சோர்தரு-சொரியும். நீர்வார-நீர்வழிய, ப், சந்தி. போய்காள்த்தி மலையை விட்டுச் சென்று. வர-மாமிசத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வர. த்: சந்தி, துணிந்தாராகி-தீர் மானம் செய்தவராகி. வார்-திண்ணனார் தம்முடைய நீள மான. சிலை-வில்லை. எடுத்துக்கொண்டு-தம்முடைய திருக் கரத்தில் எடுத்துக் கொண்டு. மலர்-செந்தாமரை மலர் களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கையால்-தம்முடைய திருக்கரங்களால்; ஒருமை பன்மை மயக்கம். தொழுது-காளத்தீசுவரரைக் கும்பிட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கிவிட்டு. போந்தார். அந்த மலை யிலிருந்து சென்றார்.

அடுத்து உள்ள 114-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திண்ணனார் காளத்தீசுவரருடைய சந்நிதியிலிருந்து பிரிய முடியாத அருமையோடு அவரை அகன்று அழகு மேவும் காளத்தி மலையிலிருந்து இறங்கி வந்து நாணன் என்னும் வேடன் தமக்குப் பின்னால் வந்து சேர முன்பு இருந்த வேறு துறைகளில் விருப்பம் அகன்று பக்தி தம்மை உந்திக்கொண்டு செலுத்தப் போகும் அந்தத் திண்ணனார் அழகிய பொன்முகலி ஆற்றினுடைய தங்கத்தை அணிந்த கரையின் மேல் ஏறி அன்று அலர்ந்த புதிய மலர்கள் மலர்ந் திருக்கும் மரங்களைப் பெற்ற பூஞ்சோலைக்குள் நுழைந் தார். பாடல் வருமாறு: - - ... " முன்புகின் றரிதில் நீங்கி மொய்வரை இழிந்து காணன் பின்புவங் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி அன்புகொண் டுய்ப்பச் செல்லும் அவர்திரு முகலி

- 's யாற்றின் பொன்புனை கரையில் ஏறிப் புதுமலர்க் காவிற்

புக்கார் .' முன்புநின்று-திண்ணனார் காளத்தீசுவரருடைய சந்நிதி பிலிருந்து. அரிதில்-அவரைப் பிரிய முடியாத அருமையோடு;