பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பெரிய புராண விளக்கம்-4

உருபு மயக்கம். நீங்கி-அவரைவிட்டு அகன்று. மொய்அழகு மேவும். வரை-காளத்தி மலையிலிருந்து. இழிந்துஇறங்கி வந்து. நாணன்-நாணன் என்னும் வேடன். பின்புதமக்குப் பின்னால். வந்து அணைய-வந்து சேர. முன்னைமுன்பு தம்மிடம் இருந்த, ப்: சந்தி. பிற-வேறு. துறைதுறைகளில்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன விளையாடுதல், ஆடை அணிதல், அணிகலன்களைப் பூணுதல் முதலியவை. வேட்கை-விருப்பம். நீங்கி-அகன்று. அன்பு-பக்தி. கொண்டு-தம்மை உந்திக்கொண்டு. உய்ப்பசெலுத்த.ச் சந்தி. செல்லும்-போகும். அவர் - அந்தத் திண்ணனார். திரு-அழகிய. முகலி ஆற்றின்-பொன்முகலி யாற்றினுடைய. பொன்-அந்த ஆறுகொண்டு வந்து சேர்த்த தங்கத்தை. புனை-அணிந்த. கரையில்-கரையின் மேல்; உருபு மயக்கம். ஏறி-ஏறிச் சென்று. ப்: சந்தி. புதுஅன்று அலர்ந்த புதிய. மலர்-மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. காவில்-பூஞ்சோலைக்குள். புக்கார்-நுழைந்தார்.

பிறகு வரும் 115-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'காடன் என்னும் வேடனும் திண்ணனாருக்கு எதிரில் போய் அவரை வணங்கிவிட்டு, "நான் நெருப்பைக் கடைந்து வைத்திருக்கிறேன்; கொம்புகளைக் கொண்ட காட்டுப் பன்றியினுடைய அங்கங்கள் எல்லாவற்றையும் உங்களுடைய எண்ணத்தின்படி பக்கத்தில் இருக்க அவற். றைச்சரி பார்த்துக் கொள்ளுங்கள்; மீண்டும்நாம் நம்முடைய விடுகளுக்குச் செல்வதற்கு இன்றைக்கு நெடுநேரம் நீங்கள் தாமதம் செய்தது ஏனோ?” என்று கூறியவுடன் அவ், விடத்தில் நின்று கொண்டிருந்த நாணன் என்னும் வேடன். பாடல் வருமாறு: メ

காடனும் எதிரே சென்று தொழுது, தீக்கடைந்து

வைத்தேன், கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்