பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 201

பெரிய தலைவன் நீ அல்லவோ?’ என்று நாணன் என்னும் வேடன் கேட்க, திண்ணனார் அவனுடைய முகத்தைப் பாராதவராகி வலிமையான பெரிய காட்டுப் பன்றியினு டைய உடலை நெருப்பில் வாட்டி மிகுதியாக உள்ள இனிய சுவையைப் பெற்ற மாமிசத் துண்டுகளை வேறு வேறாகத் தம்முடைய அம்பினால் நெருப்பிலிருந்து இழுத்துக் கொண்டு. பாடல் வருமாறு:

என்செய்தாய் திண்ணா? நீதான் என்னமால் - கொண்டாய்? எங்கள் முன்பெரு முதலி அல்லையோ?" என முகத்தை

நோக்கார் வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து

கொண்டு .' இந்தப் பாடல் குளகம், திண்ணா-திண்ணனே. என்தீ என்ன, செய்தாய்-செய்து விட்டாய். நீதான் என்ன மால்-நீதான் என்ன பைத்தியத்தை. கொண்டாய்-அடைந் தாய். எங்கள்-எங்களுடைய. முன்-முன்னால். பெருபெருமையைப் பெற்ற. முதலி-தலைவன். அல்லையோநீ அல்லவோ? என-என்று நாணன் என்னும் வேடன் கேட்க: இடைக்குறை. முகத்தை-அவனுடைய முகத்தை. நோக்கார்திண்ணனார் பாராதவராகி; முற்றெச்சம். வன்-வலிமை யைப் பெற்ற, பெரும்-பெரிய. பன்றி தன்னை-அந்தக் காட்டுப் பன்றியினுடைய உடலை ஆகுபெயர். தன்: அசைநிலை. எரியினில்-நெருப்பில் இட்டு, வதக்கி-வாட்டி. மிக்க-மிகுதியாக உள்ள. இன்புறு-இனிய சுவையைப் பெற்ற. தசைகள்-மாமிசத் துண்டுகளை. வெவ்வேறு-வேறு வேறாக. அம்பினால்-தம்முடைய அம்பால். ஈர்ந்து-நெருப்பிலிருந்து இழுத்து. கொண்டு-அவற்றை எடுத்துக் கொண்டு.

பிறகு வரும் 118-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திண்ணனார் ஓர் அம்பில் அந்த மாமிசத் துண்டு களைக் கோத்து நெருப்பில் வாட்டிக் கொழுப்பைப் பெற்ற