பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரிய புராண விளக்கம்-4

அந்த மாமிசத் துண்டுகள் பதத்தோடு வேக, அவற்றினு: டைய சிறந்த சுவையை முன்னால் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவற்றைத் தம்முடைய திருவாயில் இட்டுக் கடித்துப் பார்த்து மிகவும் இனிய சுவையைப் பெற்ற மாமிசத் துண்டுகள் எல்லாவற்றையும் சருகாகிய இலை களைச் சேர்த்துத் தைத்த ஒரு தொன்னையைப் பொருத்த மாக அமைத்துச் சேருமாறு அந்தத் துண்டுகளை அந்தத் தொன்னைக்குள் வைப்பவர் ஆயினார். பாடல் வருமாறு:

கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை

பதத்தில் வேவ. வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப்

- பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகிலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவார் ஆனார் .'

கோலினில்-திண்ணனார் ஓர் அம்பில். கோத்து-அந்த மாமிசத் துண்டுகளைக் கோத்து. க்: சந்தி. காய்ச்சி-நெருப் பில் வாட்டி.க்: சந்தி. கொழும்-கொழுப்பைப் பெற்றிருக்கும். தசை-அந்த மாமிசத் துண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம், பதத்தில் பக்குவமாக. வேவ-வேக வாலிய-அவற்றினுடைய சிறந்த, சுவை-சுவையை. முன்-முன்னால். காண்பான்தெரிந்து கொள்ளும் பொருட்டு. வாயினில்-தம்முடைய திருவாயில். அதுக்கிப் பார்த்து-இட்டுக் கடித்துப் பார்த்து. ச் சந்தி, சாலவும்-மிகவும். இனிய-இனிய சுவையைப் பெற்ற மாமிசத் துண்டுகள். எல்லாம்-எல்லாவற்றையும். சருகு இலை-இலைச் சருகுகளை; ஒருமை பன்மை மயக்கம். சருரு-உலர்ந்த இலை.இணைத்த-சேர்த்துத் தைத்த.கல்லை. ஒரு தொன்னையை. ஏல-பொருத்தமாக. ஏ. அசைநிலை. கோலி-அமைத்து. க், சந்தி. கூட-சேருமாறு. அதன்மிசைஅந்தத் தொன்னைக்குள். 'மிசை என்பது மேல் என்ற பொருளை உடையதாயினும் இங்கே உள்ளே என்று. பொருள் கொள்ள வேண்டும். இடுவார்-அந்தத் துண்டுகளை வைப்பவர். ஆனார்-ஆயினார்.