பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is பெரிய புராண ಡಿಎTಶಹರ#

வானத்தின் பக்கத்திலும் தரையிலும் வலிமையுள்ள இடிகள் எதிருக்கு எதிரில் போவனவாக இருக்க, நீண்ட கேடயங்களின் தொகுதி ஆளுகின்ற போர்த் தொழிலைப் :புரியும் வாளாயுதங்களை உடைய வீரர்கள், காகங்கள் நெருங்கிப் பறந்த போர்க்களத்தில் இரண்டு பக்கங்களிலும் வந்து கலந்து கொண்டார்கள். பாடல் வருமாறு :

மேக ஒழுங்குகள் முன்கொடு மின்னிரை

- தம்மிடை யேகொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு -

- . - மேறெதிர் செல்வன வாக நெடும்பல கைக்குலம் ஆள்வினை - வாளுடை ஆடவர்

R *

காகம் மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்.

மேக-மேகங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். ஒழுங்குகள் - வரிசைகளை. முன் - முன்னால். கொடுகொண்டு. மின்-மின்னல்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம், நிரை-வரிசையை. தம்-தங்களுக்கு, இடைநடுவில், ஏ: அசை நிலை. கொடு-கொண்டு. மாக-வானத் தின். மருங்கினும்-பக்கத்திலும். மண்ணினும்-தரையிலும். வல்-வலிமையான. உருமேறு-இடிகள்: ஒருமை பன்மை மயக்கம். எதிர்-எதிருக்கு எதிரில். செல்வன ஆக-போவன வாக இருக்க. நெடும்-நீளமான பலகை-கேடயங்களி லுடைய, 'ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. குலம்தொகுதி. ஆள்-ஆள்கின்ற, வினை-போர்த் தொழிலைப் புரியும். வாள்-வாளாயுதங்களை ஒருமை பன்ன்ம மயக்கம். உடை - உடைய ஆடவர்-வீரர்கள்: ஒருமை பன்மை மயக்கம். காகம்-காக்கைகள்; ஒருமை பன்மை மயக்கம். மிடைந்த-நெருங்கிப் பறந்த. களத்து-போர்க்களத்தில். இரு கைகளின் - இரண்டு பக்கங்களிலும்; கை: ஒருமை பன்மை மயக்கம். வந்து கலந்தனர்-வந்து கலந்து கொண்

உார்கள்: ஒருமை பன்மை மயக்கம். .