பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பெரிய புராண விளக்கம்-4

திண்ணனார் கொண்டு வந்து வைத்த. கல்லை இலைமிசைசருகிலைகளைத் தைத்துச் செய்த தொன்னைக்குள். இலை: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. படைத்த-வைத்திருந்த. ஊனின்-மாமிசமாகிய, இன்: வேண்டாவழி வந்தசாரியை. திரு-இனிய சுவையைப் பெற்ற அழகிய, அமுது-உணவை. எதிர்-காளஹஸ்தீசுவரருக்கு எதிரில். ஏ. அசைநிலை. வைத்து-வைத்துவிட்டு.

சுமந்த மலர்கள்: பூவொடு நீர் சுமந்தேத்தி.’’ என்று. திருமூலரும் பாடியருளியதைக் காண்க. -

பிறகு வரும் 125-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'கொழுப்பைப் பெற்ற மாமிசத் துண்டங்கள் எல்லா வற்றையும் அம்பினால் ஆராய்ந்து பார்த்து அதில் கோத்துக்கொண்டு அவ்விடத்தில் நெருப்பில் தக்க பக்குவம் உண்டாகுமாறு வாட்டி அவற்றைத் தம்முடைய பற்களால் கடித்துத் தம்முடைய நாக்கினால் அவற்றில் அமைந்த இனிய சுவை பெற்ற தன்மையை அறிந்து கொண்டு, அடியேன் படைத்த இந்த மாமிசம் மிகவும் அழகானது: அடியேனுடைய தலைவரே, இதனை அமுது செய்து அருளுங்கள்” என்று திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து

- கோத்தங் கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி

. . நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி - - . . . &FiT6)。 அழகிது காய வீரே. அமுதுசெய் தருளும் என்றார்.' கொழுவிய-கொழுப்பைப் பெற்ற, தசைகள்-மாமிசத். துண்டங்கள். எல்லாம்-எல்லாவற்றையும். கோலினில்-ஒர் அம்பினால், உருபு மயக்கம். தெரிந்து-ஆராய்ந்து பார்த்து. கோத்து-அந்த அம்பில் கோத்துக் கொண்டு. அங்கு-அந்த