பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 2II

இடத்தில். அழல்-நெருப்பில். உறு-தக்க. பதத்தில்-பக்குவம் உண்டாகுமாறு. காய்ச்சி-வாட்டி. ப்: சந்தி. பல்லினால்தம்முடைய பற்களால் ஒருமை பன்மை மயக்கம். அதுக்கிகடித்து. நாவில்-தம்முடைய நாக்கினால் உருபு மயக்கம். பழகிய-அவற்றில் அமைந்த. இனிமை-இனிய சுவையாகிய தன்மையை. பார்த்து-அறிந்து கொண்டு. ப்: சந்தி. படைத்த-அடியேன் தேவரீருக்கு முன் படைத்த. இவ்விறைச்சி-இந்த மாமிசம். சால-மிகவும். அழகிதுஅழகை உடையது. நாயனிரே-அடியேனுடைய தலைவ ராகிய குடுமித்தேவரே. அமுது செய்தருளும் - இதை அமுது செய்தருளுங்கள். என்றார்-என்று திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

لامہ

பிறகு உள்ள 126-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

‘அத்தகைய இந்த வார்த்தைகளைத் திருவாய் மலர்ந் தருளிச் செய்து காளஹஸ்தீசுவரருக்குத் திருவமுது படைத்து உண்ணச் செய்த வேடர்களுக்கு அரசராகிய திண்ணனார், "அழகிய காளத்தி மலையை உடைய குடுமித் தேவருக்கு இனிய சுவையைக் கொண்ட நல்ல மாமிசத்தை இனிமேலும் படைக்க வேண்டும்” என்னும் எழுந்த பெரிய விருப்பத்தைப் பார்த்துத் தன்னுடைய பல நீண்ட கிரணங்களைச் சுருக்கிக் கொண்டு, பகலைச் செய்யும் சூரியன் அத்தமன மலையில் இறங்கி அத்தமனம் ஆனான். பாடல் வருமாறு: -

அன்ன இம் மொழிகள் சொல்லி அமுதுசெய்வித்த

. வேடர் மன்னனார், திருக்காளத்தி மலையினார்க் கினிய

- - r - கல்லூன் இன்னமும் வேண்டும்' என்னும் எழுபெருங் காதல் - கண்டு.

பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில்

தாழ்ந்தான் .'