பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 313.

செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் - தாங்கி, மைவரை என்ன ஐயர் மருங்குகின் றகலா கின்றார் .'

அவ்வழி-அவ்வாறு. அந்தி - செவ்வந்தி நேரமாகிய. மாலை-மாலை வேளை. அனைதலும்-வந்தவுடன். இரவுஇனிமேல் இராத்திரி. சேரும்-வந்துவிடும். வெவ்-கொடிய விலங்கு-மிருகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். உள-இந்தக் காட்டில் இருக்கின்றன. என்று-என. அஞ்சி-அச்சத்தை அடைந்து. மெய்ம்மையின்-உண்மையில். வேறு-வேறு எந்த வேலையையும். கொள்ளார்-மேற்கொள்ளாதவராகி; முற். றெச்சம். செவ்விய-செவ்வையாகிய, அன்பு - பக்தி ஒன்றையே. தாங்கி-தம்முடைய உள்ளத்தில் தாங்கிக் கொண்டு. த், சந்தி. திரு-அழகிய. க்: சந்தி. கையில்தம்முடைய இடக்கரத்தில். சிலையும்-வில்லையும். தாங்கிபிடித்துக்கொண்டு. மை-மையைப் போன்ற வரை-கரிய மலை. என்ன-என்று கூறும் வண்ணம். ஐயர்-ஐயராகிய காளஹஸ்தீசுவரருக்கு. மருங்கு நின்று-பக்கத்திலிருந்து. அகலா.போகாமல், நின்றார்-திண்ணனார் நின்று கொண்டு இருந்தார். - **.

பின்பு வரும் 128-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அடைவதற்கு அருமையாக இருக்கும் தவங்களைப் புரிந்து முனிவர்களும் தேவர்களும் கருமையான மலை யிலும், காட்டிலும், அடைந்தும் பார்ப்பதற்கு அரியவ ரர்கிய காளஹஸ்தீசுவரரைப் பேராவல் முன்னால் பெருகி எழ திருப்தியடையாத பக்தியோடு தரிசித்துக் கொண்டு நேரில் அமையப் பார்த்துக் கொண்டு நெடுங்காலமாக உள்ள அக இருளாகிய அறியாமை போகுமாறு நிலைத்து நின்றவராகிய திண்ணனார் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு: -