பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்-4

சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார்

- - தம்மை ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டு நேர்பெற நோக்கி கின்றார், நீளிருள் நீங்க கின்றார் .' சார்வு-அடைவதற்கு. அரும்-அருமையாக இருக்கும். தவங்கள்-தவங்களை, செய்து-புரிந்து. முனிவரும்-முனிவர் களும்; ஒருமை பன்மை மயக்கம். அமரர் தாமும்-தேவர் களும். தாம்: அசைநிலை. கார்-கருமையான, மேகங்கள் தவழும் எனலும் ஆம்; கார்: ஒருமை பன்மை மயக்கம். வரை-மலையையும். அடவி-காட்டையும். சேர்ந்தும்-அந்தத் தவங்களைப் புரிவதற்காக அடைந்தும். காணுதற்குபார்ப்பதற்கு. அரியார் தம்மை-அரியவராகிய காளஹஸ் தீசுவரரை. தம்: அசை-நிலை. ஆர்வம்-பேராவல். முன்முன்னால். பெருக-பெருகி எழ. ஆரா-திருப்தியடையாத. 'குறையாத' எனலும் ஆம். அன்பினில்-பக்தியோடு; உருபு மயக்கம். கண்டுகொண்டு - தரிசித்துக்கொண்டு. நேர்நேரில். பெற-அமைய, நோக்கி-பார்த்துக்கொண்டு. நீள்நெடுங்காலமாக உள்ள. இருள்-அக இருளாகிய அறியாமை. நீங்க-போகுமாறு. நின்றார்-நிலைத்து நின்றவராகிய திண்ணனார். நின்றார்-நின்று கொண்டிருந்தார்.

அடுத்து வரும் 129-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்கள் மலையைப் போலக் குவிந்த குவியலில் ஒளியை வீசும் நிலா ஒரு பக்கம் பொங்கி எழ, குகைகளில் வாழும் பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கங்கள் வீசும் வெயிலைப் போன்ற ஒளி ஒரு பக்கம் மிகுதியாகத் தோன்ற, தழைத்த கிரணங்களைப் பெற்ற சூரியனோடும் சந்திரன் அமாவாசையில் சங்கக் குழைகளை அணிந்த காதுகளைப் பெற்றவராகிய காள ஹஸ்தீசுவரருக்குரிய காளத்தி மலைக்கு அந்த ஈசுவரரைக் கும்பிட்டு வணங்குவதற்காக வந்தாற்போல இருக்கும்.' பாடல் வருமாறு: -