பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பெரிய புராண விளக்கம்-4

பிறகு உள்ள 130-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

கலந்திருக்கும் பல மாணிக்கங்கள் வீசிய விரிந்த ஒளியினுடைய பரப்புப் பொங்கி எழ, மரகதக் கற்களும் பிரகாசத்தைக் கொண்ட நீல மணிகளும் வீசும் ஒளி வெள்ளம் அடர்வதனால் சூரியன் சந்திரன் என்னும் இரண்டு சுடர்களுக்கும் பயப்பட்டுத் தி ண் ண ன ார் சென்ற ஒவ்வொரு பக்கங்களிலும் இராத்திரியில் தோன்றும் இருட்டு எவ்விடத்திலும் எவ்விடத்திலும் ஒதுங்கி யிருந்தாற்போல் ஒரு தோற்றம் இருக்கிறது. பாடல் வருமாறு:

"விரவுபன் மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க மரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி பொரஇரு சுடருக் கஞ்சிப் போயின புடைகள்

- தோறும் இரவிருள் ஒதுங்கி னாலே போன்றுள தெங்கும்

- எங்கும் .'

விரவு-கலந்திருக்கும். பல்-பல. மணிகள்-மாணிக்கங்கள். கான்ற-வீசிய விரி-விரிந்த. கதிர்-ஒளியினுடைய. ப்: சந்தி. படலை பரப்பு. பொங்க-பொங்கி எழ, மரகதம்-மரகதக் கற்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஒளி-பிரகாசத்தை. கொள்-கொண்ட நீல மணிகளும்-நீல இரத்தினங்களும். இமைக்கும்-வீசும். சோதி-ஒளி வெள்ளம். பொர-அடர் வதனால், இரு-இரண்டு. சுடருக்கு - சுடர்களாகிய சூரியனுக்கும் சந்திரனுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அஞ்சி-பயப்பட்டு. ப்: சந்தி, போயின்-திண்ணனார் சென்ற, புடைகள் தோறும்-ஒவ்வொரு பக்கங்களிலும். இரவு-இரவு நேரத்தில் தோன்றும். இருள்-இருட்டு. எங்கும் எவ்விடத் திலும். எங்கும்-எந்த இடத்திலும். ஒதுங்கினாலே போன்றுஒதுங்கியிருப்பதைப் போல. ஏ; அசைநிலை. உளது-ஒரு தோற்றம் இருக்கிறது; இடைக்குறை. -