பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 221

பிறகு வரும் 134-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'நிறைந்திருத்தலைக் காட்டும் இருட்டைப் போக்கி விட்டுத் தன்னுடைய முகத்தைக் காண்பிக்கும் இரதத்தைப் பெற்ற சூரியன் உண்மையைக் காட்டும் பக்தியைக் கொண்ட வில்லை ஏந்தியவராகிய திண்ணனார் புரியும் ஒப்பற்ற வேட்டையில் விலங்குகளை அம்புகளால் எய்து விழச் செய் யும் காட்டில் விலங்குகளை ஓடாமல் வளைத்து அகப்படுத்து வதற்காக விரித்து வைத்த வலையை எடுத்துத் தன்னுடைய கைகளால் காட்டுபவனைப்போலத் தன்னுடைய கிரணங் களைக் காண்பித்து வானத்தில் உதயமாகும் சமயத்தில்.’ பாடல் வருமாறு: *

மொய் காட்டும். இருள்வாங்கி முகம் காட்டும் தேர்

- - . இரவி மெய் காட்டும் அன்புடைய வில்லியார் தனி வேட்டை எய் காட்டின் மா வளைக்க இட்டகருங் திரைஎடுத்துக் கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி எழும்போதில் , !

இந்தப் பாடல் குளகம். மொய்-நிறைந்திருத்தலை: முதனிலைத் தொழிற் பெயர். காட்டும்-காண்பிக்கும். இருள்-இருட்டை வாங்கி-போக்கிவிட்டு. முகம்-தன்னு டைய முகத்தை. காட்டும்-காணச் செய்யும். தேர்-இர தத்தை ஒட்டும். இரவி.-சூரியன். மெய்-உண்மையாக. காட் டும்-அமைந்து காண்பிக்கும். அன்பு-பக்தியை. உடையபெற்ற, உண்மையான பக்தியை உடையவர் என்பது கருத்து. வில்லியார்-வில்லை ஏந்தும் திண்ணனார். தனி-ஒப்பற்ற. வேட்டை-வேட்டையில். எய்-அம்புகளால் எய்து கொல்லும். காட்டின்-காட்டில் வாழும். மா-மான் , முதலிய விலங்கு களை; ஒருமை பன்மை மயக்கும். வளைக்க-ஓ .ாமல் வளைத்து அகப்படுத்துவதற்காக. இட்ட-விரித்து வைத்த. திரை-வலையை. எடுத்து-மேலே எடுத்து. க், சந்தி. கை. தன்னுடைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். காட்டு வான்போல-காட்டுபவனைப் போல. க், சந்தி. கதிர்-தன்னு