பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 23.3°

கலன்கள், மலர்கள், தூபக்கால், சாம்பிராணி, தீபம், கற்பூரத்தட்டு, கற்பூரம், அட்சதைகள், அடிக்கும் மணி, நிவேதனப் பொருள்கள் முதலியவை. கொண்டு-எடுத்துக் கொண்டு வந்து. தூய-பரிசுத்தமாகிய, பூசனை-காளத்தி நாதருடைய பூசையை தொடங்கி-ஆரம்பித்து. வழுகுற்றம். இல் இல்லாத கடைக்குறை. திருமஞ்சனம்அபிடேகம். ஏ. அசை நிலை, முதலாக-முதலிய. வரும்-அங் கங்களோடு அமையும். என்றது, பரிவட்டம் உடுத்தல், மலர் மாலையையும் அணிகலன்களையும் உருத்திராட்ச மாலையையும் அணிதல், அருச்சனை புரிதல், தீபம் காட்டுதல், தூபம் காட்டுதல், கற்பூர ஆரத்தி செய்தல், மணியை அடித்தல், பிரதட்சிணம் செய்தல், தோத்திரன்' களைப் புரிதல் முதலியவை. பூசை முழுதும் பூசை முழுவதை யும். முறைமையின்-செய்ய வேண்டிய முறைப்படி. முடித்துசெய்து நிறைவேற்றி. முதல்வனார்-முதல்வராகிய காளத்தி நாதருடைய கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடி களை; ஆகு பெயர். பணிந்தார் - சிவகோசரியார் வணங்கினார்.

பிறகு வரும் 140-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு தரையில் விழுந்து காளத்தி நாதரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு, ஒப்பற்ற முதல்வனாக விளங்கும் பரமேசு வரனே!' என பல தடவைகளால் தாம் அத்தியயனம் செய்து தெளிவை அடைந்திருந்த வேத மந்திரங்களால் தோத்திரம் புரிந்து ஒளியை வீசும் பிறைச் சந்திரனைப் புனைந்த சடாபாரத்தின் தொகுதியைப் பெற்ற திருமுடியையும், அழகிய கண்களையும் பெற்றவராகிய காளத்தி நாதரிடம் விடைபெற்றுக் கொண்டு சினம் முதலிய உட்பகைகள் குறைந்த திருவுள்ளத்தைப் பெற்ற அழகிய அந்தணராகிய சிவகோசரியார் தாம் தவம் புரியும் காட்டை அடைந்தார். பாடல் வருமாறு: