பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 237

ஒளிந்து நின்று கொண்டு. கொன்றருளி - அந்த மான் கூட்டங்களை அம்புகளை எய்து கொலை செய்தருளி.

அடுத்த வரும் 143-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'திண்ணனார் தாம் பழகிய குரவினால் கலைமான் களைக்கூவி அழைத்து அவை இறக்கும் வண்ணம் அவற்றின் உடம்புகளை ஊடுருவிச் செல்லும் கூர்மையான துணிகளைப் பெற்ற கொடிய அம்புகளை எய்தும், அடிச்சுவடிகளைப் பார்த்துச் சென்று மரை மான்களினுடைய கூட்டங்களை அவை உறங்கும் இடத்தில் அம்புகள் பாயும்படி எய்து கொன்றும், தொடர்ந்து கடமைகளை அம்புகள் எய்து கொலை செய்தும், வெயிலை உண்டாக்கும் கொடிய சூரியன் உச்சியை அடையத் தாம் தனியாகப் புரிந்த வேட்டையாகிய தொழிலைத் திண்ணனார் முடித்துக்

கொண்டார். பாடல் வருமாறு:

பயில்விளியால் கலைஅழைத்துப் பாடுபெற ஊடுருவும் அயில்முகவெம் கணைபோக்கி அடியொற்றி

மரையினங்கள் துயிலிடையிற் கிடைஎய்து தொடர்ந்துகடமைகள் எய்து வெயில்படுவெம் கதிர்முதிரத் தனிவேட்டை வினை

முடித்தார் . .

பயில்-திண்ணனார் தாம் பழகிய. விளியால்-மானைப் போலக் கூவிய குரலினால், கலை-கலை மான்களை ஒருமை பன்மை மயக்கம். அழைத்து-கூவி அழைத்து. ப்: சந்தி, பாடுஅவை இறத்தலை பெற-அடையும் வண்ணம். ஊடுருவும். அவற்றினுடைய உடம்புகளை ஊடுருவிச் செல்லும். அயில்கூர்மையான. முக-துணிகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வெம்-கொடுமையான. கணை-அம்புகளை; ஒருமை பன்மை மயக்கம். போக்கி-எய்தும். அடி-அடிகளின் சுவடுகளை ஒருமை பன்மை மயக்கம்: ஆகு பெயர். ஒற்றி. பார்த்துச் சென்று. மரை-மரை என்னும் விலங்கினுடைய. இனங்கள்-கூட்டங்களை. துயில்-அவை உறங்கும். இடையில்