பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.240 பெரிய புராண விளக்கம்-4

அடுக்கி-ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து. எரிநெருப்பை. கடையும்-தீக்கடை கோலால் கடையும். அரணியினில் - அரணிக்கட்டையில். வெம்-வெப்பமான. தழலை-நெருப்பை ப்: சந்தி. பிறப்பித்து கடைந்து உண்டாக்கி. மிக மிகுதியாக. வளர்த்து-கொழுந்து விட்டு எரியுமாறு வளர்த்து. மிருகங்கள்-தாம் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளினுடைய உடம்புகளை ஆகு பெயர். கொந்தி-வாளால் கொத்தி. அயில்-கூர்மையை உடைய. அலகு-துணியைப் பெற்ற. அம்பால்-அம்பினால். குட்டம் இட்டு-குடைந்து குழியை உண்டாக்கி. க்: சந்தி. கொழுப்புகொழுப்பை, அரிந்து-வாளால் அரிந்து கொண்டு. வந்தன. அவ்வாறு வந்தவற்றை. கொண்டு-எடுத்துக் கொண்டு. எழும்-எழுந்து எரியும். தழலில்-நெருப்பில். வக்குவனவதக்க வேண்டியவற்றை, வக்குவித்து-வதங்கச் செய்து. வதக்குவதை வக்குவது என்று கூறுவது வேடர்க்ளின் குழு உக்குறி.

பிறகு உள்ள 146-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'கூர்மை வாய்ந்த அம்புகளால் சிதைத்து உருண்டை களாக அமைப்பதையும், வகை வகையாகப் பிரித்து அமைப்பதையும் புரிந்து அந்த விலங்குகளினுடைய உடம்பு களில் இருப்பவை ஆகிய அங்கங்களினுடைய மாமிசங்கள் எல்லாவற்றையும் வாளால் அரிந்து ஒரு தொன்னையில் வைத்து அவற்றைச் சுடும்படி நீண்ட அம்பில் கோத்து எடுத்து நெருப்பில் நன்றாக வாட்டிப் பரிசுத்தமான திருவ முதைக் காளத்தி நாதருக்குப் படைப்பதற்காக அந்த மாமி சங்களினுடைய சுவையைத் திண்ணனார் பார்க்கலானார்.' பாடல் வருமாறு:

வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்தவற்றின் ஆயஉறுப் பிறைச்சிஎலாம் அரிக்தொருகல் லையில்

இட்டுச் காயநெடும் கோல்கோத்துக் கனலின்கண் உறக்

- காய்ச்சித் தூயதிரு அமுதமைக்கச் சுவைகாணல் உறுகின்றார் ."