பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்-4

எண்-கணக்கை. இறந்த-கடந்த கடவுளருக்கு-தெய் வங்களுக்கு. இடும்-படைக்கும். உணவு-உணவை. கொண்டு. தான் எடுத்துக் கொண்டு. ஊட்டும்-அவர்களை உண்ணச் செய்யும். வண்ண-சிவப்பு நிறத்தைப் பெற்ற. எரி-நெருப் யினுடைய. வாயின் கண்-வாயில். வைத்தது-இட்டது. எனஎன்று கூறும் வண்ணம்: இடைக்குறை, நெருப்பைத் தேவர் களின் வாய் என்பர். க்: சந்தி, காளத்தி-காளத்தி மலையில் எழுந்தருளியிருககும். அண்ணலார்க்கு - தலைவராகிய காளத்தி நாதருக்கு. ஆம்-உவப்பாகும். பரிசு-இயல்பை. தாம் என்றது திண்ணனாரை. சோதித்து-சோதனை செய்து. இது நல்லதா என்பதைத் தெரிந்து கொள்வதற் காகச் சோதனை செய்தார் என்றவாறு. அமைப்பதற்குஅமைப்பதற்காக, த், சந்தி. திண்ணனார் திருவாயில். திண்ணனார் தம்முடைய அழகிய வாயில். ஊன்-மாமிசங் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். திருஅமுது-திருஅமுதை.

அமைத்தார்-வைத்துக் கொண்டார்.

பிறகு வரும் 148-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ‘நல்ல பக்குவத்தை அடையும்படி நெருப்பில் வெந்து தம்முடைய நாக்கில் வைக்கும் மாமிசங்களை ஒரு தொன்னையில் வைத்து அவற்றின்மேல் தேனைத் தேனடை யிலிருந்து பிழிந்து-கலந்து அவ்வாறு கலந்த அந்த மாமி சங்களை எடுத்துக் கொண்டு மிக வேகமாகச் சென்று திருப் பள்ளித் தாமத்தையும் தூய்மையான அபிடேக நீரையும் விரைவில் முன்பு செய்ததைப் போலத் தம்மோடு எடுத்துக் கொண்டு திண்ணனார் காளத்தி மலைக்கு வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு: -

கல்லபத முறவெந்து காவின்கண் இடும் இறைச்சி கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலக்

- ததுகொண்டு வல்விரைந்து திருப்பள்ளித் தாமமும் தூய் மஞ்சனமும் ஒல்லையினில் முன்புபோல் உடன்கொண்டு

வந்தணைந்தார் . '