பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்பு:நாயனார் புராணம் - 24%

ஆனஉறுப் பிறைச்சிஅமுதடியேனும் சுவைகண்டேன், தேனுமுடன் கலந்ததிது; தித்திக்கும்." :

- எனமொழிந்தார் .' ஊன்திண்ணனார் தாம் கொண்டு வந்திருந்த மாமி சங்களாகிய ஒருமை பன்மை மயக்கம். அமுது-திருவமுதை. கல்லையுடன்-அவற்றை வைத்திருந்த தொன்னையோடு. வைத்து-காளத்தி நாதருக்கு முன்னால் வைத்து. இதுஇந்த மாமிசங்களாகிய திருவமுது. முன்னையின்-முன்பு. அடியேன் படைத்தவற்றைக் காட்டிலும். நன்று-நல்ல சுவையைப் பெற்றது. ஆல்: அசை நிலை. ஏனமொடுகாட்டுப் பன்றியோடு. மான்-புள்ளிமான். கலைகள்-கலை. மான்கள். மரை-மரைமான். கடமை-கடமை என்னும் விலங்கு. இவையிற்றில்-ஆகிய இந்த விலங்குகளினுடைய உடம்புகளில். ஆன-இருப்பவையான. உறுப்பு-அவயவங் களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். இறைச்சி-மாமி சங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். அமுது-திருவமுதை. ‘அடியேனும் என்றது. திண்ணனார் தம்மையே குறித்தது. சுவை-சுவையை கண்டேன்-சோதனை செய்து பார்த்துத் தெரிந்து கொண்டேன். இது-இந்தத் திருஅமுது. தேனும்தேனையும். உடன்கலந்தது-சேர்த்துக் கலந்தது. தித்திக்கும். இது இனிப்பாக இருக்கும். என-என்று: இடைக்குறை. மொழிந்தார்-திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு உள்ள 151-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'இந்த முறையில் திண்ணனார் காளத்தி நாதருக்குத் திருவமுதைப் படைத்து உண்ணச் செய்து தம்முடைய ஒப்புக் கூறுவதற்கு அருமையாகிய பூசையைப் புரிந்து அந்த வழியில் நடப்பவர் எந்தச் சமயத்திலும் மேலும் மேலும் தம்முடைய திருவுள்ளத்தில் தோன்றி எழும் பக்தியினால் காளத்தி அப்பருக்கு எதிரில் இருந்து கொண்டு இரவு நேரங்களில் துயில மாட்டார்: பகல் நேரங்களில் காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவார். பாடல் வரும்ாறு: - > • ' $. -