பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிப்ப் நாயனார் புராணம் 249

வினைகள் இரண்டும், உயர்களிடம் வந்து சேரும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் அற்றுப் போக பக்தியே தம்முடைய திருமேனிப் பிழம்பாக மாறிய வராகிய அந்தத் திண்ணனார் தம்முடைய எண்ணத்திற்குள் அடங்கும் அளவைப் பெற்ற பெருமையை உடையவரோ?' பாடல் வருமாறு: -

  • முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்

இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கை தன்பரிசும் வினை இரண்டும் சாரும்மலம் மூன்றும்அற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் -

- அளவினரோ ?”

முன்பு-முன்னால் திண்ணனார். திரு-அழகிய, க்: சந்தி. காளத்தி-காளத்தி மலையில் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். முதல்வனார்-முதல்வராகிய காளத்திநாதர். அருள் நோக்கால்-வழங்கிய திருவருட் பார்வையால். இன்பு-இன் பத்தை. உறு-உண்டாக்கும். வேதகத்து-ரசவாதத்தில் பரிச வேதியினால். இரும்பு-இரும்பு என்னும உலோகம். பொன்தங்கம். ஆனாற்போல்-ஆக மாறினாற் போல. யாக்கைதன்தம்முடைய திருமேனியின்; தன்: அசை நிலை. பரிசும்இயல்பும். வினை-வினைகள் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம். இரண்டும்-புண்ணியம் பாவம் என்னும் இரண்டும். சாரும்-உயிர்களுக்கு வந்து சேரும். மலம்-மலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். மூன்றும்-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும். அற-தம்மிடமிருந்து அற்றுப் போக. அன்பு-பக்தியே. பிழம்பாய்-தம்முடைய திருமேனிப் பிழம் பாக. த், சந்தி. திரிவார்-மாறியவராகிய, அவர் - அந்தத் திண்ணனார். கருத்தின் தம்முடைய எண்ணத்திற்குள். இது சேக்கிழார் தம்மைக் குறித்தது. அளவினரோஅடங்கும் அளவைப் பெற்ற பெருமையை உடையவரோ? அல்லர் என்பது கருத்து. -

பின்பு உள்ள 155-ஆம் பாடலின் கருத்து வருமாறு: