பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 பெரிய புராண விளக்கம்-4

அந்த முறையில் பக்தராகிய திண்ணனார் தமக்குத் தெரிந்த வழியில் காளத்தி நாதருக்குப் பூசையைப் புரிந்துவர, நிலை பெற்று விளங்கிய சைவ ஆகமம் வி த்துள்ள முறையோடு பெருமையைப் பெற்ற அந்தணராகிய சிவகோசரியார் காளத்தி நாதருக்கு அருச்சனையைப் புரிந்து விட்டு, 'இந்த இடத்தில் அடியேனுடைய தலைவ. னாகிய காளத்திநாதனே, இந்த அனுசிதமான செயலைப் புரிந்தவரை அடியேன் பார்க்க முடியவில்லை; தேவரீருடைய திருவருளினால் இதனைப் போக்கித் திருவருள் புரிய வேண்டும். என்று பிரார்த்திக்க. பாடல் வருமாறு:

"அங்கிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப

மன்னிய ஆகமப்படியால் மாமுனிவர் அருச்சித், திங் கென்னுடைய நாயகனே, இதுசெய்தார்

- - தமைக்கான்ேனன்; உன்னுடைய திருவருளால் ஒழித்தருள - - வேண்டும். என .'

இந்தப் பாடல் குளகம். அந்நிலையில்-அந்த முறையில். அன்பனார்.பக்தராகிய திண்ணனார். அறிந்த-தமக்குத். தெரிந்த நெறி-வழியில், பூசிப்ப-காளத்தி நாதருக்குப் பூசையைப் புரிந்து கொண்டுவர. மன்னிய-நிலைபெற்று: விளங்கிய. ஆகமப்படியால்-சைவாகமம் விதித்துள்ள முறையோடு: உருபு மயக்கம். மா-பெருமையைப் பெற்ற: முனிவர் - அந்தணராகிய சிவகோச்ரியார். அருச்சித்துகாளத்தி நாதருக்கு அருச்சனையைப் புரிந்து விட்டு. இங்கு-இந்த இடத்தில், என்னுடைய-அடியேனுடைய. நாயகனே-தலைவனாகிய காளத்தி நாதனே. இது.இந்த அனுசிதமான செயலை. செய்தார்தமை-செய்தவரை, தம்: அசை நிலை. க், சந்தி. காணேன்-அடியேன் பார்க்க முடிய வில்லை. உனனுடைய - தேவரீருடைய. திருவருளால்திருவருளினால், ஒழித்தருள-இதனைப் போக்கித் திரு' வருள் புரிய வேண்டும் என-வேண்டும் என்று பிரார்த்திக்க. என: இடைக்குறை. -