பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பெரிய புராண விளக்கம்-4

ஆளி முன் னாகி உள்ள விளைத்தவோ? அறியேன் ." ... • என்று:

ளிேரும் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் - - + சென்றார் .

வாளியும் - திண்ணனார் அம்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். தெரிந்து-ஆராய்ந்து கொண்டு-எடுத்துக் கொண்டு. இம் மலையிடை-இந்தக் காளத்தி மலையில். எனக்கு-அடியேனுக்கு. மாறா-விரோதமாக. மீளி-யமனைப் போன்ற வலிமையைப் பெற்ற மறவர்-வேடர். செய்தார்இந்த அடாத செயலைப் புரிந்தவர். உளர்கொலோயாரேனும் இருக்கிறாரோ. ஒ: அசை நிலை. விலங்கின்மிருகங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். சாதி'ச்ாதிகள்: ஒருமை பன்மை மயக்கம். அந்த விலங்குகளாவன: புலி, வேங்கைப் புலி, கரடி, காட்டுப்பன்றி, காட்டுப் பசு மாடு, காட்டெருமை மாடு, ஒநாய், நரி, கரடி முதலியவை. ஆளி-சிங்கம். முன்னாகி. முதலாகி, உள்ள- இருக்கிற விலங்குகள். விளைத்தவோ - இதைச் செய்தனவோ. அறியேன் - அடியேன் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்று-என எண்ணி. நீள்-அவர் உயரமாக உள்ள. இரும்பெரிய குன்றை-காளத்தி மலையினுடைய உருபு மயக்கம். ச்: சந்தி. சாரல்-பக்கங்களில் சென்று; ஒருமை பன்மை. மயக்கம். நெடிது-நீண்ட நேரம், இடை-அந்த இடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். நேடிதேடிக் கொண்டு. ச்: சந்தி. சென்றார்-போனார்.

அடுத்து வரும் 173-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு தேடிக்கொண்டு சென்ற திண்ணனார் ஒரு வேடரையும் பார்க்க வில்லை; கெட்ட மிருகங்களை அந்த மலைப் பக்கங்களிலும், வேறு எந்த இடங்களிலும் தேடியும் அவர் பார்க்கவில்லை; மறுபடியும் தம்முடைய தலைவராகிய காளத்தி நாதரிடம் வந்து நெடுநேரமாக இருந்த வருத்தத் தோடு அழகு நிறைந்த காளத்தி நாதருடைய செந்தாமரை