பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - - - - 277.

அடியேங்களுடைய தலைவனாகிய காளத்திநாதனிடத்தில் இந்தத் துன்பமான செயலை முன்னால் புரிந்தவரை அடியேன் பார்க்க வில்லை; வலிமையைப் பெற்ற வெற்றிக் கழலைப் பூண்ட கால்களைப் பெற்ற வேடர்கள் எந்தக் காலத்திலும் மின்னலைப் போல ஒளியை வீசும் நீண்ட அம்புகளால் உண்டாகும் புண்களை ஆற்றிப் போக்குகின்ற உண்மையான மருந்தைத் தேடி எடுத்துக் கொண்டு தங்கம் உண்டாகும் அடிவாரத்தைப் பெற்ற காளத்தி மலைக்குக் கொண்டு அடியேன் வருவேன்' என்று திண்ணனார் எண்ணிப் புறப்பட்டுச் சென்றார். பாடல் வருமாறு:

என்செய்தால் தீரு மோதான்? எம்பிரான் திறத்துத் . . . - - தீங்கு முன்செய்தார் தம்மைக் காணேன், மொய்கழல் வேடர் . . . . - ". . . ; என்றும்

மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும்மெய் மருந்து

- - - - - தேடிப்

பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவன் நான்

- என்று போனார்.'

என்-என்ன செய்தால்-பரிகாரத்தைப் புரிந்தால். தீரும்இவ்வாறு காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து இரத்தம் வழிவது நிற்கும். ஒ, தான்: இரண்டும் அசை நிலைகள். எம்பிரான்-அடியேங்களுடைய தலைவனாகிய காளத்தி நாதன்: இது திண்ணனார் தம்மையும் பிற வேடர்களையும்

சர்த்துச் சொன்னது. திறத்து-இடத்தில், த், சந்தி. தீங்குஇந்தத் துன்பமான செயலை. தீய செயலை' எனலும் ஆம். முன்-முன்பு. செய்தார் தம்மை-புரிந்தவரை: தம்: அசை நிலை. க், சந்தி. காணேன்-அடியேன் பார்க்கவில்லை. மொய்-வலிமையைப் பெற்ற, கழல்-வெற்றிக் கழல்களைப் பூண்ட கால்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். என்றும்எல்லாக் காலத்திலும். மின்-மின்னலைப் போல். செய்ஒளியை வீசும். வார்-நீண்ட பகழி-அம்புகள் உண்டாக்கும்: .