பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் . 287

நாதரும், திண்ணனாரை ஆட்கொண்ட அழகிய கண்களை உடையவரும், அழகிய காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அற்புதருமாகிய காளத்தி அப்பருடைய அழகிய திருக்கரம் தம்முடைய பக்தராகிய அந்தத் திண்ணனார் தம்முடைய விழியை முன்னால் பறிக்கும் கரத்தைத் தடுக்கும் பொருட்டு மூன்று முறை அடுத்து அடுத்து பாம்புகளாகிய கங்கணங்களைத் திருக் கரங்களில் அணிந்து கொண்டிருக்கும் அந்தக் காளத்திசு வரர் அமுதத்தைப் போன்ற திருவாக்கு, "கண்ணப்ப நிற்க, நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப.' என.. பாடல் வருமாறு: - -

செங்கண் வெள் விடையின் பாகர், திண்ணனார்

- தம்மை ஆண்ட அங்கணர் திருக்க்ா ளத்தி அற்புதர், திருக்கை அன்பர் தம்கண்முன் இடக்கும் கையைத் தடுக்க மூன்றடுக்கு

. - 巧T母。 கங்கணர் அமுத வாக்குக், கண்ணப்பு நிற்க’

>- - . என்றே , ' செம்-சிவந்த கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வெள்-வெண்மை நிறத்தைக் கொண்ட. விடையின் பாகர்-இடப வாகனத்தை ஒட்டுபவராகிய காளத்தி நாதரும். திண்ணனார் தம்மை-திண்ணனாரை: தம்: அசை நிலை. ஆண்ட-ஆட்கொண்ட அம்-அழகிய. கணர்-கண்களை உடையவரும். கண்: ஒருமை பண்மை மயக்கம். கனர்: இடைக் குறை. திரு.அழகிய. க், சந்தி. காளத்தி-காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்: தருளியிருக்கும். அற்புதர்-அற்புதருமாகிய காளத்தியப்ப ருடைய. திரு-அழகிய க்: சந்தி, கை-திருக்கரம். அன்பர்தம்முடைய பக்தராகிய அந்தத் திண்ணனார். தம்-தம் முடைய. கண்-விழியை. முன்-தமக்கு முன்னால். இடக்கும்பறிக்கும். கையை-கரத்தை. த், சந்தி. தடுக்க-தடுக்கும் பொருட்டு. மூன்று-மூன்று முறைகள். அடுக்கு-அடுத்து