பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பெரிய புராண விளக்கம்-4

அடுத்து வரும் முறையோடு. நாக-பாம்புகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். கங்கணர்-கங்கணங்களைத் தம்முடைய திருக்கரங்களில் அணிந்து கொண்டிருக்கும்.அந்தக் காளத்திசு வரர். கங்கணம்: ஒருமை பன்மை மயக்கம். அமுத-அமு தத்தைப் போன்ற இனிமையான வாக்கு- திருவாக்கு. க்: சந்தி. கண்ணப்ப நிற்க-நில்லு கண்ணப்ப; நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப. என்று-எனத் திருவாய் மலர்ந் தருளிச் செய்து. ஏ. ஈற்றசை நிலை.

அற்புதர்: "அற்புதன் அயன் அறியா வகை நின்ற வன்.' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், "அற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், "அற்புதன் காண்க அநேகன் காண்க." என்று மாணிக்க வாசகரும், "அற்புறத் தெய்வம் இதனின் மற்றுண்டே." என்று கருவூர்த் தேவரும், "கருணையே வடிவமாகி அற்புதக்கோலம் நீடி.", "அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக் கணியாய் நின்றான்.', 'கறைக் கண்டர் அற்புதக் கூத்தாடுகின்ற அம்பலம்.' என்று சேக்கிழாரும் பாடி அருளியவற்றைக் காண்க.

காளத்தி நாதர், நில்லு கண்ணப்ப' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ததை, "மற்றைக் கண்ணினும் வடிக் கணை மடுத்தினன், மடுத்தலும், நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என், அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என், மின்னுரைய தனொடும் எழிற்சிவலிங்கம், தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையால், அன்னவன் றன்கை அம்பொடும். அகப்படப்பிடித் தருளினன்.” என்று நக்கீரதேவ நாய னாரும் அருளிச் செய்ததைக் காண்க. - -

பிறகு வரும் 184-ஆம் பாடலின் கருத்து வருமாறு: காட்டில் வாழும் வேடர்களினுடைய பெருமகனா ராகிய திண்ணனார் தம்முடைய கண்ணைப் பிடுங்கிக் காளத்தி நாதருடைய திருவிழியில் அப்பும் சமயத்திலும், மாமிசமாகிய திருவமுதை உகந்து ஏற்றுக் கொண்ட