பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、食& பெரிய புராண விளக்கம்-4

களும். ஆர்ப்ப-முழக்கத்தைச் செய்ய பொழிந்தனர். சொரிந்தார்கள்.

அடுத்து வரும் 185-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பெற வேண்டிய பாக்கியம் இனிமேல் இதற்குமேல் ஒன்று இருக்கிறதா? தலைவனாகிய காளத்தி நாதனுடைய அழகிய திருவிழியிலிருந்து வந்த துன்பத்தால் வரும் இரத் தத்தைப் பார்த்து அச்சத்தை அடைந்து திண்ணனார் தம்முடைய விழியைப் பிடுங்கித் தம்முடைய விழியில் அப்பு வதற்கு உதவி செய்யும் கரத்தை இடபமாகிய கொடியை உயர்த்திப் பிடித்தவராகிய அந்தக் காளத்தி நாதர் தம்முடைய திருக்கரத்தால் பற்றிக்கொண்டு, 'திண்ணனே, நீ என்னுடைய வலப் பக்கத்தில், ஒப்பு இல்லாதவனே, நிற் பாயாக’ என நிலைபெற்று விளங்கும் பெரிய திருவருளை விருப்பத்தோடு வழங்கினார். பாடல் வருமாறு:

1 பேறினி இதன்மேல் உண்டோ? பிரான்திருக்

கண்ணில் வந்த ஊறுகண் டஞ்சித் தம்கண் இடங்தப்ப உதவும் கையை ஏறுயர்த் தவர்தம் கையால் பிடித்துக் கொண், -

“டென்வலத்தில் மாறிலாய், கிற்க' என்று மன்னுபேர் அருள்புரிந்தார் . .

பிரான்-தலைவனாகிய காளத்தி நாதனுடைய திரு. அழகிய க்:சந்தி. கண்ணில்-திருவிழியில். வந்த-வழிந்துவந்த ஊறு-துன்பத்தால் வரும் இரத்தத்தை. கண்டு-பார்த்து. அஞ்சி-அச்சத்தை அடைந்து, த், சந்தி. தம்-தம்முடைய; என்றது திண்ணனாருடைய’ என்றபடி கண்-விழியை. இடந்து-பிடுங்கி. அப்ப-தம்முடைய திருவிழியில் அப்பு வதற்காக. உதவும்-உதவி புரியும். கையை திண்ன னாருடைய திருக்கரத்தை ஏறு-இடபத்தை. உயர்த்தவர். துவசமாக உயர்த்திப் பிடித்தவராகிய அந்தக் காளத்தி யப்பர். தம்-தம்முடைய கையால் - திருக்கரத்தினால், பிடித்துக்கொண்டு-பற்றிக்கொண்டு. என்-என்னுடைய.