பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·盟台 பெரிய புராண விளக்கம்-4

. - - - 窍 களை ஒருமை பன்மை மயக்கம். வழங்கினர்-வீசினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். முற்றிய-நிறைவுபெற அமைந்த. பெரு-பெரிய வளன்-செல்வம். இன்றியும் - இல்லாமலும். முற்படு-தாங்கள் புரிய முற்பட்ட கொடை-ஈகை. நிலை நின்றிட-நிலையாக நிற்க. உற்றன-தங்களிடம் உள்ள பண் டங்க ைள. உதவிய-இரவலர்களுக்கு வழங்கிய, பண்பினர்-நற்பண்பை உடைய வள்ளல்களை ஒருமை பன்மை மயக்கம். சில கண்டகர்-சில் முட்களைப் போன்ற கொடிய வீரர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒத்தனர்-ஒத்து இருப்பவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். உளர்-இருக்கிறார் கள் இடைக்குறை. வள்ளல்களை ஒத்தனர் என்க.

பிறகு வரும் 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"கொலை செய்வதை உடைய போர்க்களத்தில் வீரர்கள் இறந்து போனார்கள்; அவர்களுடைய முகங்கள் உயிரோடு இருக்கின்றன என்று எண்ணித் தங்களிடம் உள்ள பறப்பதற்குரிய சிறகுகள் அமைந்த கரிய காக்கைகள் பரவிப் பறந்தன; சுழல் அலையாக இருந்தன; அவை அவ்வாறு சேர்ந்ததனால் ஒளியை வீசும் கண்களில் உள்ள கரிய மணிகள் இரும்பு வேலையைப் புரியும் தொழிலாளர் களாகிய கொல்லர்களினுடைய உலைக் கூடத்தில் முகங் களிற் பொதிந்து பக்கத்தில் நெருங்கிய கரிகளினிடையில் தங்கியுள்ள புகையை வெளிவிடுகின்ற நெருப்பை ஒத்து விளங்கின. பாடல் வருமாறு :

1 அடல்முனை மறவர் மடிந்தவர் அவர்முகம் . . .

- உயிருள என்றுறு படர்சிறை சுலவு கருங்கொடி படர்வன -

à சுழல்வன துன்றலில் விடுசுடர் விழிகள் இரும்புசெய்

வினைஞர்தம் உலையின் முகம்பொதி புடைமிடை கரியிடை தங்கிய புகைவிடு ‘. . . . . . . தழலை நிகர்த்தன."