பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயன்ார் புராணம் 323

எருமை மாட்டின் இனிய சுவையைப் பெற்ற பாலினுடைய. தாறும்-நறுமணத்தை வீசும். பங்குல்-மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். தோய்-படிந்து தவழும். மாடமாடங்கள் உயர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச் சந்தி. சாலை மருங்கு-சாலையின் பக்கத்தில். இறை-சிறிது நேரம், ஒதுங் கும்-வந்து சேரும். மஞ்சும்-மேகங்களும் ஒரும்ை பன்மை மயக்கம்.அங்கு-அந்த இடத்தில். அவை-அந்த மேகங்கள். ப்ொழிந்த-சொரிந்த நீரும்-மழை நீரும். ஆகுதி-அந்தணர் கள் வளர்க்கும் யாக்ாக்கினியில் சொரியும் நெய்யாகிய ஆகுதியினால் எழுந்த, ப், சந்தி, புகை-புகையினுடைய. ப்: சந்தி. பால்-பகுதி. நாறும்-நறுமணம் கமழும். - பிறகு உள்ள 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: '

பொருந்திய செல்வம் படைத்தவர்கள் வாழும் மிகுதியாக உள்ள நீர்வளம், நிலவளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்ற சிவத்தலமாகிய அந்தத் திருக்கடவூரில் தம்முடைய இல்லற வாழ்க்கையை நடத்துபவர், பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர், மூன்று நூல் களைப் பெற்ற பூணுாலை அணிந்த மார்பைக் கொண்ட வேதியராகிய குங்குலியக் கலய நாயனார் என்று கூறப் பெற்ற திருநாமத்தைக் கொண்டவர், பெருமையைப் பெற்ற கங்கையாற்றைப் புனையும் சடாபாரத்தைத் தம்முடைய தலையிற்கொண்ட தலைவனாகிய அமிர்தகடேசுவரனுடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை விரும்பி ஒவ்வொரு நாளும் உருக்கத்தை அடைந்த பக்தி மிகுதியாக உண்டாகிய திருவுள்ளத்தைப் பெற்றவர், நல்லொழுக்கத்தில் மிக்க சிறப்பைக் கொண்டவர். பாடல் வருமாறு: -

மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார்

அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் பெ.-4-20 -