பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பெரிய புராண விளக்கம்-4

பெருகதி அணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்."

மருவிய-பொருந்திய திருவின்-செல்வம் படைத்தவர் கள் வாழ்வதும் , திணை மயக்கம் ; வினையாலணையும் பெயர். மிக்க-மிகுதியாக உள்ள. வளம்-நீர்வளம், நில வளம், நன் மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்றது மாகிய ஒருமை பன்மை மயக்கம். பதி-சிவத்தலமாகிய, அதனில்-அந்தத் திருக்கடவூரில். வாழ்வார்-தம்முடைய இல்லற வாழ்க்கையை நடத்துபவர். அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர் ; திணை மயக்கம். மறை ஒருமை பன்மை மயக்கம். முந்நூல்-மூன்று நூல்களைப் பெற்ற பூணுாலை. நூல்: ஒருமை பன்மை மயக்கம். மார்பின்-அணிந்த மார்பைக் கொண்ட, அந்தணர்-வேதியராகிய. கலயர்-குங்குலியக் கலய நாயனார். என்பார்-என்று கூறப் பெற்ற திருநாமத்தைக் கொண்டவர். பெரு-பெருமையைப் பெற்ற நதி-கங்கை யாற்றை. அணியும்-புனையும். வேணி-சடாபாரத்தைத் தம்முடைய தலையிற் கொண்ட ப்:சந்தி. பிரான்-தலைவ. னாகிய அமிர்தகடேசுவரனுடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை ஆகு பெயர். பேணி-விரும்பி. நாளும்ஒவ்வொரு நாளும். உருகிய-உருக்கத்தை அடைந்த அன்புபக்தி, கூர்ந்த-மிகுதியாக உண்டாகிய சிந்தையார்-திருவுள் ளத்தைப் பெற்றவர். ஒழுக்கம்-நல்ல ஒழுக்கத்தில். மிக்கார்மிக்க சிறப்பைக் கொண்டவர். -

அடுத்து வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

இளைஞனாக விளங்கு ம் வேதியனாகிய மார்க் கண்டேயன் தம்மைப் பிடித்துக் கொள்ள அவனுடைய அச்சத்தைப் போக்கித் தம்முடைய திருவருளை வழங்கும் வ்ழியினால் திருமாலும் நான்கு முகங்களைக் கொண்ட