பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பெரிய புராண விளக்கம்-4

இந்நெறி - இத்தகைய வழியில், ஒழுகும்-குங்குலியக் கலய நாயனார் நடந்து வரும். நாளில்-காலத்தில். இலம் பாடு-அவருக்கு உண்டான வறுமை. நீடு-நெடுங்காலம். செல்ல-இருந்து வந்ததனால், நல்-அந்த நாயனார் தம் முடைய நல்ல. நிலம்-வயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். முற்றும்-முழுவதையும். விற்றும்- விற்பனை செய்தும். நாடிய-விரும்பிய, அடிம்ை-வேலைக்காரரை. விற்றும்-விற்பனை புரிந்தும். பல் நெடும்-நெடுங் காலமாக இருந்த பல. தனங்கள்-செல்வங்கள். மாள-ஒழிய, ப்: சந்தி. பயில்-தாம் வாழ்ந்து பழகிய. மனை வாழ்க்கை தன்னில்இல்லற வாழ்க்கையில். தன்: அசை நிலை. மன்னிய-நிலை பெற்று விளங்கிய சுற்றத்தோடு உறவினர்களோடு. மக்களும்-அவருடைய புதல்வர்களும். வருந்தினார்கள்

வருத்தத்தை அடைந்தார்கள்.

பின்பு வரும் 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

எந்த வகையான பண்டம் ஒன்றுகூட இல்லையாகி இரண்டு தினங்கள் தாம் உண்ணும் உணவுகள் இல்லாமற் போய் மயக்கத்தை அடையும் தம்முடைய புதல்வர் களோடும் பெருகி உள்ள உறவினர்களைப் பார்த்துக் காதலைப் புரியும் அவருடைய பத்தினியார் தம்முடைய கணவராகிய குங்குலியக் கலய நாயனாருடைய கையில் குற்றம் இல்லாத மங்கலத்தைப் பெற்ற நூலில் கோத் திருக்கும் தங்கத் தாலியை அளித்து, "இதை விற்று தெற்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்.” என்று கூறினார். பாடல் வருமாறு:

1 யாதொன்றும் இல்லை யாகி இருபகல் உணவு மாறிப்

பேதுறும் மைந்த ரோடும் பெருகுசுற் றத்தை

காதல்செய் மனைவி யார்தம் கணவனார். கலய

". . . . . . . . , னார்.கைக் கோதில்டிங் கலநூல் தாலி கொடுத்து, நெற் - கொள்ளும்' என்றார் :