பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பெரிய புராண விளக்கம்-4

அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்தெழும் அன்பு

பொங்கச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்

தமக்கொப் பில்லார் . . இந்தப் பாடவில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் திருக்கிறது. தமக்கு ஒப்பு இல்லார்-தமக்கு நிகராக வேறு யாரும் இல்லாதவராகிய குங்குலியக் கலய நாயனார். விடையவர்-இடப வாகனத்தை ஒட்டுபவராகிய வீரட் டானேசுவரர் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். வீரட்டானம்-திருக்கடவூர் வீரட்டானம் என்னும் ஆலயத் திற்கு விரைந்து-வேகத்தோடு. சென்று-எழுந்தருளி. எய்திஅந்தத் திருக்கோயிலை அடைந்து. என்னை-அடியேனை; இது சேக்கிழார் தம்மைக் குறித்துச் சொன்னது. உடையவர்-ஆளாக உடையவரும். எம்மை-அடியேங்களை; என்றது. சேக்கிழார் தம்மையும் குங்குலியக் கலய நாயனா ரையும் சேர்த்துச் சொன்னது. ஆளும்-ஆட்கொள்ளும். ஒருவர்தம்-ஒப்பற்றவராகிய அமிர்த கடேசுவரருடைய. தம்: அசைநிலை. பண்டாரத்தில்-ஆலயத்தில் உள்ள கரு. ஆலத்தில். அடைவுற-சேரும்படி ஒடுக்கி-இந்தக் குங்குவிய முட்டையை வைத்து விட்டு. எல்லாம்-தம்முடைய எல்லா உறுப்புக்களும். அயர்த்து-சோர்வை அடைந்து, எழும்மேலெழும். அன்பு-பக்தி. பொங்க-பொங்கி எழ. ச் சந்தி, சடையவர்-தம்முடைய தலையில் சடாபாரத்தை உடைய வராகிய அமிர்தகடேசுவரருடைய. மலர்-செந்தாமரை மலர் களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தாள்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம், போற்றிவாழ்த்தி வணங்கிக் கொண்டு. இருந்தனர்-அங்கேயே அந்த

நாயனார் தங்கியிருந்தார். x

பின்பு உள்ள 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'வீரட்டானேசுவரருடைய பக்தராகிய குங்குலியக் கலய நாயனார் அந்தக் கோயிலிலுள்ள கருவூலத்தில் தங்கிக் கொண்டு இருக்கத் தம்முடைய பக்தர்களுக்குப் பலவகை