பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 . . பெரிய புராண விளக்கம்-4

இடத்திலும். பொன்-தங்கம். பயில்-குவிந்திருக்கும். குவை யும்-குவியலையும். நெல்லும்-நெற் குவியலையும். பொருஒப்பு. இல்-இல்லாத கடைக்குறை. பல்-வேறு பல.வளனும்வளங்களையும்; ஒருமை பன்மை மயககம். அவையாவன: ஆடைகள், பாத்திரங்கள், ஆசனங்கள், நவமணிகள் முதவி யவை. பொங்க-பொங்கி எழும் வண்ணம். மன்-நிலை பெற்று விளங்கும். பெரும்-பெரிய செல்வம்-செல்வத்தை. ஆக்கி-உண்டாக்கி. மனையில் குங்குலியக் கலய நாயனா ருடைய திருமாளிகையில், நீட-நெடுக இருக்குமாறு.

வைத்தனன்-வைத்தான். .

go. - அடுத்து வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தக்குங்குலியக் கலய நாயனாருடைய பத்தினியாரும் புதல்வர்களும் பசியினால் வாட்டத்தை அடைந்து அன்றைத் தினத்தில் இராத்திரியில் அயர்ச்சி உண்டாக உறங்கும் சமயத் தில் நல்ல தவத்தைப் புரிந்த பூங்கொடியைப் போன்ற வராகிய அந்த மாதரசியாருக்குச் சொப்பனத்தில் தலை வனாகிய வீரட்டானேசுவரன் திருவருளை வழங்க, விரைவில் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து தம்முடைய திருமாளி கையில் வந்து குவிந்திருந்த செல்வத்தைப் பார்த்த பிறகு, எண்ணுவாரானார். பாடல் வருமாறு:

மற்றவர் மனைவி யாரும் மக்களும் பசியால் வாடி அற்றைநாள் இரவு தன்னில் அயர்வுறத் துயிலும் ... - - போதில் நற்றவக்;கொடிய னார்க்குக் கனவிடை நாதன் கல்கத் தெற்றென உணர்ந்து செல்வம் கண்டபின் சிந்தை செய்வார்.'

மற்று: அசை நிலை. அவர்-அந்தக் குங்குலியக் கலய நாயனாருடைய மனைவியாரும்பத்தினியாரும். மக்களும். அந்த நாயனாருடைய புதல்வர்களும். பசியால்-பசியினால். வாடி-வாட்டத்தை அடைந்து. அற்றை நாள்-அன்றைத் தினத்தில், இரவு தன்னில்-இராத்திரியில். தன்.அசை நிலை.