பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 323;

16), செப்போர் கொம்பர் தாங்கிய தெனப் பொலிவன முலைக்கொடியே." (சித்திரகூடப் படலம், 26), கன்றுபிரி. காராவின் துயருடைய கொடி..' (குகப் படலம், 66), தழையெனும் அக்கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம்.', 'அருட்டை எனும் வல்லி தந்தாள்.' (சடாயு காண் படலம், 27, 28), "வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கை தன் மருங்குல் நோக்க', 'கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி மேனி நனிபெற்று விளை காமநெறி வாசத் தேனின் மொழி யுற்றினிய செவ்விதனி. பெற்றோர் மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள். , காமவல்லியாம் கன்னி என்றாள்.' (சூர்ப் பணகைப் படலம், 6,33,39), "வள்ளிநுண் மருங்குலன்ன வானவர் மகளிர்.” (ஊர்தேடு படலம், 38), 'பெய், தவத்தினோர் பெண்கொடி எம்முழைப் பிறந்தாள்.' (கும்பகருணன் வதைப் படலம், 234), ‘அனல் வீழ்ந்த கொடித்தான் என்ன மெய் சுருண்டாள்.' (பிராட்டி களம் காண் படலம், 8) என்று கம்பர் பாடியருளிய வற்றையும், புனமயிலோ பொற்கொடியோ...' (திக்கு விசயப் படலம், 156) என்று உத்தரகாண்டத்தில் வருவன. வற்றையும் காண்க.

பிறகு வரும் 17-ஆம் பர்டலின் கருத்து வருமாறு:

யமனைச் சினந்து உதைத்த செந்தாமரை மலரைப் போலச் சிவந்த திருவடியைப் பெற்றவராகிய அமிர்த கடேசுவரர் குங்குலியக் கலய நாயனாராகும் தொடரும். பக்தியை உடைய திருவுள்ளத்தைப் பெற்ற அடியவர் தெரிந்து கொள்ளும் வழியினால், "குங்குலியக் கலயனே, நீ. மிகவும் பசியோடு இருக்கிறாய்; உன்னுடைய விசாலமாகிய உயர்ந்த திருமாளிகைக்குச் சென்று பாலோடு கூடிய இனிய சுவையைக் கொண்ட உணவை உண்டு உன்னுடைய துன்பத்தைப் போக்கிக் கொள்வாயாக" என்று திருவாய், மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: 3, # &