பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரிய புராண விளக்கம்-4

கள் ஆகாயத்தில் பறந்து செல்கின்ற துவசங்களைப் பறக்க விடுகின்ற்வர்களும் பண்களைப் பாடுகின்றவர்களும் ஆகிய வித்தியாதரர்களினுடைய புதல்வர்களை வென்று விட்டார் கள். பாடல் வருமாறு : - -

  • திண் படை வயவர் பிணம்படு செங்கள -

- - மதனிடை முன்சிலர் புண்படு வழிசொரி யும்குடர்

பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன்செயல்

- குன்றுதல் இலர்தலை கின்றனர், விண்படர் கொடிவிடு பண்பயில்

விஞ்சையர் குமரரை வென்றனர்."

திண்-உறுதியான. படை-வாள், வேல், கேடயம் முதலிய ஆயுதங்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். வயவர் வலிமையைப் பெற்ற வீரர்களினுடைய ஒருமை பன்மை ம்யக்கம். பிணம்-பிணங்கள்: ஒருமை பன்மை மயக்கம். படு-விழுந்து கிடக்கும். செம்-இரத்தத்தால் சிவந்த களமதனிடை-போர்க்களத்தில். அது பகுதிப் பொருள் விகுதி. முன்-முன்னால், சிலர்-சில வீரர்களி னுடைய புண்-உடம்புகளில் புண்கள் ஒருமை பன்மை மயக்கம், படுவழி-உண்டானபோது, சொரியும் - தரையில் / விழுகின்ற. குடர்-அவர்களுடைய குடல்களை ஒருமை பன்மை மயக்கம். பொங்கிய-பொங்கி எழுந்த கழுகு-பினத் தின்னிக் கழுகுகள்; ஒருமை பன்மை மயக்கம். பருந்தொடு, பருந்துகளோடு; ஒருமை பன்மை மயக்கம். கொண்டு. தங்கள் அலகுகளால் கவ்விக்கொண்டு. எழு-மேலே எழுந்து பறக்கும். பொழுதினும் சமயத்திலும். முன்-முன்னால், செயல்-தாங்கள் புரிந்த செயல்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். குன்றுதல்-குறைதல். இலர்-இல்லாதவர்களாகி: முற்றெச்சம். தலை நின்றனர்-தலை சிறந்து நின்று கொண் டிருந்தார்கள் ஒருமை பன்மை மயக்கம். விண்-அவர்கள் ஆகாயத்தில். படர் - பறந்து செல்கின்ற கொடி விடு