பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 329

பெண்களின் இடுப்புக்கு மின்னல் உவமை: மின்னியர் நுண்ணிடையார் மிழலை.", "மின்னாரிடையா ளொடும் கூடிய வேடம்.', 'மின்னாரிடையாள் உமையாளோடு.' 'மின்திரண்டன்ன நுண் ணிடை அரிவை., மின்போல் மருங்குல் மடவாளொடு.', மின்னாரிடை யாளொரு பாகமாய்.', மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர்." என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், மின்னிறம் மிக்க இடையுமை நங்கை.', மின்னின் நேரிடையாள் உமை பங்கனை.', மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்.', மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும்.', மின்னிடையாள் பாகன்.', மின்நலத்த நுண்ணிடையாள் பாகத்தான் காண்.’’, மின்னேரிடை பங்கன் நீயே.', மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்.', மின்னிலங்கு நுண் ணிடையாள் பாகத்தாரும்.', 'மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'மின்செய்த நுண்ணிடையாள் பரவை.', மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா...' என்று சுந்தரமூர்த்தி நாய னாரும், மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர். , மின்னேர் நுடங்கிடைச் செந்துவர் வாய் வெண்ணகையீர்.', மின் கணினார் நுடங்கும் இடையார்.', மின்னியல் நுண்ணி டையார்கள்.” என்று மாணிக்கவாசகரும், மின்னின் இடையாள் உமையாள் காணவிகிர்தன் ஆடுமே.” என்று திருவாவியமுதனாரும், மின்னிடையாளும் மின்னாளனும் கூட்ட த் து." என்று திரு மூல ரு ம், 'இடைக்கு மின்தோற்றம். என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'மின்தயங்கு நுண்ணிடையாள்.', மின்னாரும் கொடி மருங்குற் பரவை.', மின்னிடையாளுடன் கூடி”, 'மின்னிடை மடவார் சூழ.', மின்னிடையார் சிறுமுறுவ லுடன் விளம்ப.', மின்னிடை மடவாய் நம்பி வர இங்கு வேண்டும்.', மின்னிடையார்,பால் அன்பரை உய்க்கும்.'